அரசியலை விட்டு விலகிய பொன்சேகா! ஊழல் தொடர்பில் பகிரங்க குற்றச்சாட்டு
ஊழல் நிறைந்த கலாசாரத்தை ஏற்றுக்கொள்ள முடியாத காரணத்தினால் அதிலிருந்து விலகினேன் என ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,
“எமது நாட்டில் நீண்டகாலமாக நிலவிய ஊழல் நிறைந்த அரசியல் கலாசாரம் நாட்டின் பொருளாதாரத்தையும் மக்களின் வாழ்க்கையையும் சீரழித்தது.
பொருளாதார நெருக்கடி
அரச வளங்களையும் நாட்டின் பணத்தையும் மக்களுக்குக் கிடைக்க வேண்டிய நன்மைகளையும் ஊழல் அரசியல்வாதிகள் கொள்ளையடித்தனர்.

இதன் மூலம் ஒரு சிலர் செல்வந்தர்களாகவும் ஆடம்பர வாழ்க்கை வாழ்பவர்களாகவும் மாறியபோதிலும், பெரும்பான்மையான மக்கள் வறுமையிலும் பொருளாதார நெருக்கடியிலும் வாழவேண்டிய நிலை ஏற்பட்டது.
வறிய மக்களுக்கு சிறிய உதவிகளை வழங்கி அவர்களது வாக்குகளைப் பெற்றுக்கொள்வதே ஊழல் அரசியல்வாதிகளின் அரசியல் கலாசாரமாக இருந்தது.
தகரத் தகடுகள், தலையணைகள் உள்ளிட்ட பொருட்களை வழங்குவதன் மூலம் மக்களின் ஆதரவைப் பெற்றுக்கொண்டனர்.
அரசியல் முறை
ஆனால், இவ்வாறான உதவிகள் மக்களின் வாழ்க்கையில் நிரந்தரமான மாற்றத்தை ஏற்படுத்தவில்லை.

நானும் ஒரு காலத்தில் இந்த அரசியல் முறைக்குள் இருந்தேன். ஆனால், அங்கு நிலவிய ஊழல் நிறைந்த கலாசாரத்தை ஏற்றுக்கொள்ள முடியாத காரணத்தினால் அதிலிருந்து விலகினேன்.
இதனை நாம் சாதகமான மாற்றமாகக் கருத வேண்டும். கடந்த காலங்களில் மக்கள் எரிபொருள் மற்றும் எரிவாயுவுக்காக நீண்ட வரிசைகளில் காத்திருந்தனர்.
இவ்வாறான நிலைமைகளுக்குக் காரணமான அரசியல்வாதிகள் யார் என்பதை மக்கள் மறந்துவிடக்கூடாது” என கூறியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |