லண்டன் நகரை விட பாரிய பனிப்பாறை நகர்வதால் பரபரப்பு
London
Georgia
By Sumithiran
அண்டார்டிகாவில் உள்ள பனிப்பாறைகள் உருகி வருவதால் கடல் மட்டத்தின் அளவு உயர்ந்து வருவதாகவும் இதனால் இன்னும் ஒரு சில ஆண்டுகளில் கடலோரத்தில் உள்ள பல நகரங்கள் மூழ்கும் என்றும் விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
இந்த நிலையில் தற்போது லண்டன் மாநகரத்தை விட இரண்டு மடங்கு பெரிய பனிப்பாறை ஒன்று அண்டார்டிகா கண்டத்தை விட்டு பிரிந்திருப்பதாகவும் இந்த பெரிய பனிப்பாறை ஜோர்ஜியா தீவை நோக்கி நகர்ந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
பொது மக்களுக்கு ஆபத்து
இந்த பனிப்பாறை நகர்ந்து வருவதால் விலங்குகள் மற்றும் பறவைகளுக்கு ஆபத்து ஏற்படலாம் என்றும் இந்த பனிப்பாறை ஜோர்ஜியா தீவில் மோதினால் அந்த தீவில் உள்ள பொது மக்களுக்கும் ஆபத்து ஏற்படலாம் என்றும் கூறப்படுகிறது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |

1ம் ஆண்டு நினைவஞ்சலி