புலம்பெயர்தேச மக்களுக்கு விடுக்கப்பட்ட அழைப்பு
நெதர்லாந்து தமிழ் கத்தோலிக்க ஆன்மிக பணியகம் முன்னெடுக்கும் பெனு அன்னையின் திருத்தலம் நோக்கிய தமிழர் திருயாத்திரை எதிர்வரும் மாதம் 13 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக நெதர்லாந்து ஆன்மிக பணியகத்தினர் தெரிவித்துள்ளனர்.
இவ்வருடத்தின் 25 யூபிலி ஆண்டாக சிறப்பிக்கப்படும் இந்த நிகழ்வுகள்ஆன்மிக பணியகத்தினரால் அங்கு முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
பெனு அன்னையின் திருத்தலத்தில்
இதன் ஒரு நிகழ்வாக பெல்ஜியம் பெனு அன்னையின் திருத்தலத்தில் ஈழ மண்ணில் சமயம்,மொழி, இனம் கடந்து மக்களை ஒன்றிணைக்கும் மருதமடு அன்னையின் ஆறடி உயரம் கொண்ட திருச்சொருபம் அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்படவுள்ளது.
மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு யோசப் பொன்னையா
இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு யோசப் பொன்னையா,பெனு மறைமாவட்ட ஆயரின் சிறப்பு பிரதிநிதி டெறிக் டே வியுலர் இணைந்து சிறப்பிக்கவுள்ளனர்.
இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மறைமாவட்டத்தைச் சேர்ந்த போல் றபின்சனின் குணமாக்கல் நிகழ்வும் இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு நெதர்லாந்து ஆன்மிக பணியகத்தினர் புலம்பெயர் தேச மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
