கிளிநொச்சியில் சோகம் - பாம்பு தீண்டி குழந்தை உயிரிழப்பு!
Sri Lanka Police
Kilinochchi
By Sathangani
கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் நேற்று முன்தினம் (15) பாம்பு தீண்டி குழந்தையொன்று உயிரிழந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
கடந்த 14ஆம் திகதி இரவு குழந்தை நித்திரையிலிருந்த சந்தரப்பத்தில் வீட்டிற்குள் புகுந்த பாம்பு குழந்தையை தீண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குழந்தையை தர்மபுரம் வைத்தியசாலையில் உடனடியாக அனுமதித்துள்ளனர். எனினும் குழுந்தையின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவித்த வைத்தியர்கள் குழந்தையை கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.
காவல்துறையினர் விசாரணை

கிளிநொச்சி வைத்தியசாலையில் மாற்றப்பட்ட குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு வயதும் ஏழு மாதங்களுமுடைய தனுஜன் ஜஸ்மின் என்ற குழந்தையே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் தொடர்பில் தர்மபுரம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
5ம் ஆண்டு நினைவஞ்சலி