கொழும்புக்கு விரையும் டீசல் கப்பல்
Ceylon Petroleum Corporation
Colombo
Sri Lanka
Sri Lanka Fuel Crisis
By Sumithiran
டீசல் ஏற்றிய கப்பல்
டீசல் ஏற்றிய கப்பல் ஒன்று எதிர்வரும் 16ஆம் திகதி காலை 6.00 மணிக்கு கொழும்பு துறைமுகத்தை வந்தடைய உள்ளதாக இலங்கை பெற்றோலிய சேமிப்பு முனையத்தின் உயர் அதிகாரி ஒருவர் சிங்கள ஊடகம் ஒன்றிடம் தெரிவித்தார்.
எரிபொருளை ஏற்றிய இரண்டு கப்பல்கள் இலங்கை கடற்பரப்பிற்கு வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள போதிலும், இரண்டு கப்பல்கள் இலங்கைக்கு வருவது தொடர்பில் பெற்றோலிய சேமிப்பு முனையத்திடம் இருந்து உத்தியோகபூர்வ அறிக்கை எதுவும் கிடைக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
கடும் எரிபொருள் தட்டுப்பாடு
இதேவேளை இலங்கையில் கடும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக வாகனங்கள் நீண்ட வரிசையில் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்பாக நிற்கின்றமை குறிபிபடத்தக்கது.
