கொழும்பில் தொடருந்துடன் மோதி வெளிநாட்டவர் உயிரிழப்பு (படங்கள்)
Sri Lanka Police
Colombo
Sri Lanka
By Sathangani
கொழும்பு - வெள்ளவத்தை பகுதியில் தொடருந்துடன் மோதியதில் வெளிநாட்டவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இன்று (06) காலை வெள்ளவத்தை தொடருந்து கடவையில் குறித்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
காலியிலிருந்து கொழும்பு நோக்கி வந்த தொடருந்துடன் மோதிய நிலையிலேயே குறித்த வெளிநாட்டவர் உயிரிழந்துள்ளார்.
காவல்துறையினர் விசாரணை
அத்துடன், உயிரிழந்த நபர் தொடர்பான விடயங்கள் இதுவரை வெளிவரவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
எனினும், குறித்த வெளிநாட்டவர் தவறுதலாக மோதுண்டு உயிரிழந்தாரா அல்லது தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டாரா என்பது தொடர்பில் எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
3 நாட்கள் முன்போரின் அகக் காயங்களுடன் வாழும் மாற்றுத்திறனாளிகள் !
1 வாரம் முன்
மரண அறிவித்தல்