மகிந்தவை தேடிச்சென்று சந்தித்த சீனாவின் உயர்மட்டக்குழு
Colombo
Mahinda Rajapaksa
China
By Sumithiran
இலங்கைக்கு வருகை தந்துள்ள சீன உயர்மட்டக்குழு முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவை அவரது இல்லத்திற்கு சென்று சந்தித்துள்ளது.
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் விசேட தூதுக்குழுவே நேற்றையதினம்(21)முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்ஸவின் கொழும்பு விஜேராமையில் அமைந்துள்ள உத்தியோகபூர்வ இல்லத்திற்கு சென்று சந்தித்துள்ளது.
பல்வேறு விடயங்கள் ஆராய்வு

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் யுவான் ஜியாஜூன் உள்ளிட்ட தூதுக்குழுவினர் இந்த சந்திப்பின்போது இலங்கைக்கான சீனாவின் உதவித்திட்டங்கள் உட்பட பல்வேறுவிடயங்கள் தொடர்பில் கலந்துரையாடியதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சந்திப்பின்போது அமைச்சர் பந்துல குணவர்தன, பொதுஜனபெரமுனவின் பொதுச் செயலாளர் சாகல காரியவசம் ஆகியோர் உடனிருந்தமை குறிப்பிடத்தக்கது.
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி