கிளிநொச்சியில் பாரிய விபத்து - யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவர் பலி!
Kilinochchi
Accident
By Pakirathan
கிளிநொச்சி - முகமாலை பகுதியில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இந்த விபத்து இன்று காலை 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணத்திலிருந்து திருகோணமலை நோக்கி பயணித்த அரச பேருந்துடன், கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் மோதி குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.
உயிரிழப்பு
விபத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்திய யாழ்ப்பாணம், துன்னாலை பகுதியைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அதில் பயணித்த சிறுவர்கள் இருவர் படுகாயமடைந்த நிலையில் பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர், மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
குறித்த விபத்து தொடர்பான விசாரணைகளை பளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி