மானிப்பாயில் பாரவூர்தியை திருடிய 33 வயது இளைஞன் கைது!
Jaffna
Northern Province of Sri Lanka
By pavan
மானிப்பாய் காவல்துறை பிரிவுக்குட்பட்ட உடுவில் பகுதியில் பாரவூர்தி சாரதியை அச்சுறுத்தி, லொறியை திருடிச்சென்ற சம்பவத்தோடு தொடர்புடைய நபரொருவரை காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.
பாரவூர்தி சாரதி பாரவூர்தியை நிறுத்தி தொலைபேசி அழைப்பை மேற்கொள்ளும்போது அவ்விடத்துக்கு உந்துருளியில் வந்த சிலர் சாரதியை அச்சுறுத்தியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான முறைப்பாட்டின் பேரில் திருடப்பட்ட பாரவூர்தியை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளதோடு, சந்தேக நபர் ஒருவரை மானிப்பாய் காவல் நிலைய அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.
சந்தேக நபர்
சந்தேக நபர் 33 வயதுடைய ஆனைக்கோட்டை பிரதேசத்தை சேர்ந்தவர் ஆவார்.
மேலும், சந்தேக நபர் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முன்னிலைபடுத்தப்படவுள்ள நிலையில், மானிப்பாய் காவல்துறையினர் தொடர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


ரணிலின் கைதும் இந்தியாவின் மௌனத்திற்கான பின்புலமும் 17 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்