மன்னாரில் தொடரும் மக்கள் போராட்டம்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
Sri Lankan Tamils
Mannar
SL Protest
By Shalini Balachandran
மன்னாரில் (Mannar) காற்றாலை கோபுரங்கள் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வுக்கு எதிராக 25 ஆவது நாளாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டம் நேற்று (27) இடம்பெற்றுள்ளது.
இந்தநிலையில், போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நானாட்டான் பிரதேச மக்களும் போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.
பல்வேறு வாசகங்கள்
போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மன்னாரில் புதிதாக முன்னெடுக்கப்படவுள்ள காற்றாலை மின் கோபுரம் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவை முழுமையாக நிறுத்தும் வரை தமது போராட்டம் தொடரும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |







ரணிலின் கைதும் இந்தியாவின் மௌனத்திற்கான பின்புலமும் 9 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்