முடிவுக்கு வந்த ரணிலின் அரசியல் வாழ்க்கை: அநுர தரப்பு வெளிப்படை
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் எஞ்சிய அரசியல் வாழ்க்கை பிணை பெறுவதற்காக வெளிவந்த நோய்கள் காரணமாக முடிவுக்கு வந்துள்ளதாக விவசாய அமைச்சர் லால் காந்த தெரிவித்துள்ளார்.
இதன்படி, ரணில் அரசியலுக்குப் பொருத்தமற்றவர் என்றும், அவர் நோய்வாய்ப்பட்ட படுக்கையில் இருக்க வேண்டியவர் எனவும் நிரூபிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறிப்பாக, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆதரிக்க ஒன்றிணைந்த எதிர்க்கட்சி குழுவின் முகங்களைப் பார்க்க ஆவலுடன் பலர் ஒன்றுகூடியுள்ளதாகவும், அவர்களில் நாட்டின் அழிவுக்கு பங்களித்தவர்களும் உள்ளனர் என்றும் அவர் கூறியுள்ளார்.
நாட்டின் சட்டம்
இந்த நிலையில், முன்னாள் ஜனாதிபதி கைது செய்யப்பட்ட பின்னர் கிளர்ச்சியடைந்தவர்களில் பெரும்பாலோர் பல்வேறு மோசடிகள் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவர்கள் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், நாட்டின் சட்டம் அவர்களுக்குப் பின்னால் வரும் என்பதை அறிந்ததால் அவர்கள் இவ்வாறு கூடிவந்துள்ளதாகவும் அமைச்சர் லால் காந்த மேலும் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

