இம்மாதம் 30, 31ஆம் திகதிகளில் ஊழியர் சேமலாப நிதியச் சேவைகள் இடைநிறுத்தம்!
எதிர்வரும் 30 மற்றும் 31 ஆம் திகதிகளில் ஊழியர் சேமலாப நிதியத்தின் (EPF) தரவுத்தளம் மற்றும் இணைய வழியிலான ஊழியர் சேமலாப நிதிய முறைமை சார்ந்த பொதுமக்கள் சேவைகள் அனைத்தும் இடைநிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தொழில் திணைக்களத்தின் கணினி கட்டமைப்பில் அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதால், இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழில் திணைக்களத்தின் தொழில் ஆணையாளர் நாயகம் நதீகா வட்டலியத்தவினால் நேற்று (23) வெளியிட்டுள்ள அறிக்கையிலே இந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
ஊழியர் சேமலாப நிதியக் கொடுப்பனவு
அந்த அறிக்கையில், இத் தற்காலிக சேவை இடைநிறுத்தமானது தொழிற்திணைக்களத்தின் தலைமை அலுவலகம் உட்பட அனைத்து மாகாண, மாவட்ட மற்றும் உப தொழில் அலுவலகங்களுக்கும் பொருந்தும்

இதற்கமைய, குறித்த இரு நாட்களிலும் ஊழியர் சேமலாப நிதியக் கொடுப்பனவுகள் மற்றும் புதிய பதிவுகளை மேற்கொள்ளுதல் உள்ளிட்ட எந்தவொரு சேவையும் வழங்கப்படமாட்டாது.
மேலும், குறித்த இரண்டு நாட்களில் சேவைகளைப் பெறுவதற்காக ஏற்கனவே நேரத்தை முன்பதிவு செய்தவர்கள், அடுத்த ஒரு மாத காலத்திற்குள் ஏதேனும் ஒரு அலுவலக நாளில் தொழில் திணைக்கள அலுவலகத்திற்குச் சென்று, தாங்கள் முன்பதிவு செய்த சேவையைப் பெற்றுக்கொள்ள முடியும்.” என குறிப்பிடப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |