சர்ச்சைக்குரிய கிரிஷ் ஒப்பந்த விவகாரம்: நாமலின் கையெழுத்தை பரிசேதனை செய்ய CIABOC கோரிக்கை

Namal Rajapaksa CIABOC
By Dharu Nov 07, 2026 01:20 AM GMT
Report

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின்(Namal Rajapaksa) கையெழுத்து அடங்கிய ஆவணம் ஒன்றை ஆய்வு செய்வதற்காக அரசாங்கப் பகுப்பாய்வாளர் திணைக்களம் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளதாக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு (CIABOC) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

டிரான்ஸ்வொர்க்ஸ் சதுக்கத்தில் முன்மொழியப்பட்ட கலப்புப் பயன்பாட்டு அபிவிருத்தித் திட்டத்திற்காக இந்திய நிறுவனமான கிரிஷ்-க்கு நிலம் கைமாற்றப்பட்டது தொடர்பாக ரூ. 70 மில்லியன் இலஞ்சம் வழங்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணையின் ஒரு பகுதியாக இந்த விடயம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

கொழும்பு பிரதான நீதவான் முன்னிலையில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

18 தனிநபர் கடன்களை பெற்றுள்ள சஜித்: CIABOC-வின் நடவடிக்கை

18 தனிநபர் கடன்களை பெற்றுள்ள சஜித்: CIABOC-வின் நடவடிக்கை

விசாரணைக்கு தேவையான ஆவணம்

இதன்படி விசாரணையின் ஒரு பகுதியாக, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவினுடையது எனக் கூறப்படும் கையெழுத்து அடங்கிய ஆவணம் ஒன்று பரிசோதனைக்காக அரசாங்கப் பகுப்பாய்வாளருக்கு அனுப்பப்பட்டுள்ளதாக CIABOC தெரிவித்துள்ளது.

சர்ச்சைக்குரிய கிரிஷ் ஒப்பந்த விவகாரம்: நாமலின் கையெழுத்தை பரிசேதனை செய்ய CIABOC கோரிக்கை | Namal Handwriting Examined Krrish Investigation

சட்ட நடவடிக்கைகள் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாமல் மற்றும் கிரிஷ் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் ஜானகி சிறிவர்தனவும் சிறைச்சாலை அதிகாரிகளால் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் இது குறித்த சமர்ப்பனங்கள் நீதிமன்றில் முன்வைக்கப்பட்டுள்ளன.

கொழும்பு பிரதேச செயலாளர் மற்றும் முன்னாள் நில ஆணையாளர் உட்பட பல நபர்களிடமிருந்து ஏற்கனவே வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக, இலஞ்ச ஆணைக்குழுவின் சார்பில் முன்னிலையான உதவிப் பணிப்பாளர் ஒருவர் நீதிமன்றத்தில் தெரித்துள்ளார்.

இதன்படி விசாரணைக்கு தேவையான ஆவணத்தை ஆய்வுக்காக விடுவிக்குமாறு உயர் நீதிமன்றப் பதிவாளருக்கு உத்தரவிடக் கோரி இலஞ்ச ஆணைக்குழு நீதவானிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இருப்பினும், நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மேலதிக அறிக்கையில் இந்தக் கோரிக்கை சேர்க்கப்படவில்லை என்பதை கவனித்த நீதவான், முறையாக ஆவணப்படுத்தப்பட்ட ஒரு விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்குமாறு ஆணைக்குழுவிற்கு உத்தரவிட்டார்.

தனது விசாரணையின் முன்னேற்றம் குறித்து நவம்பர் 20 அன்று அறிக்கை சமர்ப்பிக்குமாறு இலஞ்ச ஆணைக்குழுவிற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இலங்கைத் தொழிலாளர்களைப் பணியமர்த்தும் திட்டத்திற்கு தாய்லாந்து ஒப்புதல்

இலங்கைத் தொழிலாளர்களைப் பணியமர்த்தும் திட்டத்திற்கு தாய்லாந்து ஒப்புதல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
நன்றி நவிலல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

விடத்தல்தீவு, மன்னார்

06 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 2ம் வட்டாரம், நல்லூர்

04 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வவுனியா

06 Nov, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி, கொழும்பு, கனடா, Canada

03 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Mitcham, United Kingdom

06 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, வேப்பங்குளம்

02 Nov, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், kilinochchi

04 Nov, 2011
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025