ரஷ்யாவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையே அபாயகரமான ஒப்பந்தம்: ஜெலென்ஸ்கி எச்சரிக்கை
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்வைத்த, உக்ரைனுக்கான புதிய பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்த அனைத்து விவரங்களும் தனக்குத் தெரியாது என்று அந்நாட்டின் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
இதன்படி ரஷ்யாவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையிலான ஒரு ஒப்பந்தம் அபாயகரமானதாக இருக்கக்கூடும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ரஷ்யாவின் உயர்மட்டத் தூதரைச் சந்தித்த பிறகு, உக்ரைனுக்கான ஒரு புதிய பாதுகாப்பு ஒப்பந்தம் ஐரோப்பா முழுவதையும் உள்ளடக்கியதாக இருக்கலாம் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உறுதியளித்துள்ளார்.
குழப்பத்தில் ஐரோப்பிய தலைநகரங்கள்
எனினும் அந்த முன்மொழிவில் அதிக விவரங்கள் இல்லாததால், அது ஐரோப்பியத் தலைநகரங்களைக் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

"இது மிகவும் பெரியதாக இருக்கப் போகிறது. இதில் உக்ரைனைத் தாண்டி, ஐரோப்பா முழுவதுமே ஈடுபடக்கூடும் என்று கூட நான் சொல்வேன். இது ஒரு பெரிய, அழகான ஒப்பந்தமாக இருக்கும், மேலும் அனைவரும் மகிழ்ச்சியடைவார்கள்," என்று ட்ரம்ப் தனது கருத்தை முன்வைத்துள்ளார்.
இந்நிலையிலேயே வொலோடிமிர் ஜெலென்ஸ்கி தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |