மீண்டும் வரிசை: நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு...! பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் முக்கிய அறிவிப்பு
நாட்டில் தற்போது எவ்வித எரிபொருள் தட்டுப்பாடும் இல்லை என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வி ஒன்றிலேயே கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி. ஜே. ராஜகருணா மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை. எம்மிடம் தேவையான அளவு எண்ணெய் கையிருப்பு உள்ளது. எண்ணெய் விநியோகிக்கப்பட்டு வருகின்றது.
நிறுவனங்களுக்கு நஷ்டம்
தனியார் நிறுவனங்கள் தமக்கு நஷ்டம் என்பதால் சில பகுதிகளில் எண்ணெய் விநியோகத்தைக் குறைத்துள்ளமையே இதற்குக் காரணமாகும்.

அப்படியான இடங்களில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன நிரப்பு நிலையங்கள் இல்லை என்றால், அந்த இடங்களில் வரிசைகள் உருவாகின்றன. அதுவே பிரச்சினையாக மாறியுள்ளது.
செபெட்கோ நிரப்பு நிலையங்கள் அருகில் இல்லாத 52 இடங்கள் அடையாளங் காணப்பட்டுள்ளன.
செயலாளரின் தலைமையில் அனைத்து நிறுவனங்களையும் அழைத்து நடாத்தப்பட்ட கலந்துரையாடலில், அந்த இடங்களுக்கு முன்னுரிமை அளிப்பதாக அந்த நிறுவனங்கள் ஒப்புக்கொண்டன.
விநியோகிப்பதைக் குறைத்தனர்.
உண்மையில் அவர்கள் தமக்கு நஷ்டம் என்பதால் எண்ணெய் விநியோகிப்பதைக் குறைத்தனர்.

விநியோகிக்கும் அளவிலிருந்து அந்த இடங்களுக்கு முன்னுரிமை அளிப்பதாக அவர்கள் வாக்குறுதி அளித்துள்ளனர்.
ஆனால் சில பிரதேசங்களில் அவர்களது எண்ணெய் விநியோக குறைபாடு காரணமாக சில இடங்களில் சிறிய வரிசைகள் வரக்கூடும் என தலைவர் டி. ஜே. ராஜகருணா குறிப்பிட்டுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |