மத்திய மாகாண தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை
இலங்கையின் சில பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, மத்திய மாகாணத்தில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு எதிர்வரும் 09ஆம் திகதி (திங்கட்கிழமை) விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளது.
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு இந்த விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சலே உள்ளிட்ட நால்வரின் திட்டமிட்ட செயற்பாடு: நீதிமன்றில் சி.ஐ.டி பகிரங்கம்
சுந்தரலிங்கம் பிரதீப் விடுத்த கோரிக்கை
குறித்த விடுமுறைக்கு பதிலாக நவம்பர் 14 ஆம் திகதி (சனிக்கிழமை) பதில் பாடசாலை நாளாகக் கருதி பாடசாலைகளை நடத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மத்திய மாகாண ஆளுநர் செயலகம் அறிவித்துள்ளது.

பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் விடுத்த வேண்டுகோளுக்கு அமைய இந்த விசேட விடுமுறைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நவம்பர் 08ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை தீபாவளித் திருநாள் வருவதால், மக்கள் அதனைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில் மத்திய மாகாண ஆளுநர் செயலகத்தினால் இந்த விடுமுறை அங்கீகரிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வெளிநாட்டுத் தூதர்கள் வசிக்கும் ஆடம்பரக் குடியிருப்பையும் விட்டுவைக்காத நாட்டின் எரிவாயு தட்டுப்பாடு!
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |