நீதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை விவாதம் ஆரம்பம்
புதிய இணைப்பு
நீதியமைச்சர் ஹர்ஷன நானயக்காரவிற்கு எதிராக எதிர்க்கட்சியால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் சற்றுமுன்னர் ஆரம்பமாகியுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பீ பெரேரா இந்த நம்பிக்கையில்லா பிரேரணையை நாடாளுமன்றில் முன்வைத்து வருகின்றார்.
நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட சம்பவத்தின் போது கைதிகள் மற்றும் அதிகாரிகளின் பாதுகாப்புத் தொடர்பிலான தமது பொறுப்பை உரிய வகையில் நிறைவேற்றத் தவறியமை காரணமாகவே நீதியமைச்சருக்கு எதிராக இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

முதலாம் இணைப்பு
இன்றைய (24.07.2026) நாளுக்கான நாடாளுமன்ற நடவடிக்கைகள் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன (Jagath Wickramaratne) தலைமையில் சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளன.
காலை 09.30க்கு ஆரம்பமான நாடாளுமன்ற அமர்வுகள் மாலை 05.00 வரை நடைபெறவுள்ளது.
அதன்படி, காலை 9.30 மணி முதல் 10.00 மணி வரை நிலையியற் கட்டளை 22 இல் குறிப்பிடப்பட்டுள்ள 1 முதல் 6 வரையான நாடாளுமன்ற அலுவல்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரம்
காலை 10.00 மணி முதல் 11.00 வரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காகவும், காலை 11.00 மணி முதல் 11.30 மணி வரை நிலையியற் கட்டளை 27 (2)ன் கீழான கேள்விக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து காலை 11.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையிலான காலப்பகுதிக்குள் நீதியமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நானயக்காரவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு வாக்கெடுப்பை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சியைச் சேர்ந்த 37 நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பங்களுடன் கூடிய நம்பிக்கையில்லா பிரேரணை நேற்று முன்தினம் (22) சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவிடம் கையளிக்கப்பட்டது.
அண்மையில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறையின்போது, தமக்குரிய அமைச்சுப் பொறுப்புகளை அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார உரிய முறையில் நிறைவேற்றத் தவறியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களை முன்வைத்தே இந்த நம்பிக்கையில்லா பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சித்துப்பாத்தி மயானத்தில் சட்டரீதியாக சடலங்கள் புதைக்கப்பட்டமைக்கான ஆவணங்கள் இல்லை : சட்டத்தரணி விளக்கம்
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |