யாழ்.மாவட்ட செயலக பழைய கட்டடம் குறித்து அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு
தொன்மை வாய்ந்த யாழ்ப்பாண பழைய மாவட்டச் செயலகக் கட்டடத்தை பாதுகாக்குமாறு புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனவி அதிகாரிகளுக்கு ஆலாசனை வழங்கியுள்ளார்.
யாழ்ப்பாண மாவட்டத்திற்கு நேற்று (23) விஜயம் மேற்கொண்டுள்ள அமைச்சர், பழைய பூங்கா வளாகத்தில் அமைந்துள்ள பழைய மாவட்டச் செயலகக் கட்டடத்தை நேரில் சென்று பார்வையிட்டார்.
குறித்த புராதனக் கட்டடத்தை பார்வையிட்டதுடன், அதன் வரலாற்று முக்கியத்துவம் மற்றும் கட்டடக்கலைப் பெறுமதிகளைப் பாதுகாக்கும் வகையில் மேற்கொள்ளப்பட வேண்டிய பராமரிப்பு நடவடிக்கைகள், புனரமைப்பு பணிகள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடினர்.
ஆலோசனை வழிகாட்டுதல்
மேலும், குறித்த கட்டடத்தின் பாதுகாப்பு, புனரமைப்பு மற்றும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனைகளையும் வழிகாட்டுதல்களையும் வழங்கினார்.

இக் களவிஜயத்தில் வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன், யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளர் எஸ். கபிலன், தொல்பொருள் திணைக்களப் பணிப்பாளர் நாயகம், ஆளுநரின் செயலாளர், தொல்பொருள் திணைக்களத்தின் யாழ். மாவட்ட அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
சித்துப்பாத்தி மயானத்தில் சட்டரீதியாக சடலங்கள் புதைக்கப்பட்டமைக்கான ஆவணங்கள் இல்லை : சட்டத்தரணி விளக்கம்
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |