கொடிய சட்டமான PTA கொண்டுவரப்பட்டு இன்றுடன் 47 ஆண்டுகள்…

By Theepachelvan Jul 18, 2026 06:22 AM GMT
Report
Courtesy: தீபச்செல்வன்

பொதுவாக சட்டங்கள் மக்களையும் ஜனநாயகத்தையும் பாதுகாக்கவே உருவாக்கப்படுகின்றது. ஆனால் இனமொன்றையே நசுக்குவதற்காக உருவாக்கப்பட்டதே பயங்கரவாத தடைச்சட்டம்.

இதனால் இலங்கை அரசின் பயங்கரவாத சட்டம் உலகின் கொடூரமான சட்டமாக கருதப்படுகிறது.  இதனை உடன் நீக்க வேண்டும் என்று இலங்கை அரசு மீது பன்னாட்டுச் சமூகம் நெருக்கடிகளை ஏற்படுத்தி வரும் நிலையில் இலங்கையில் தொடர்ந்த ஆட்சி அமைக்கும் அரசுகள் “நீக்காமல் திருத்துகிறோம்!” என்று கூறி சர்வதேசத்தை சமாளிக்க முற்படுகின்றன.

ஆனால் புதிய சட்டம் இன்னும் ஆபத்தைக் கொண்டது என்றும் அது முற்றாக நீக்கப்பட வேண்டும் என்றும் தொடர் குரல்கள் எழத் துவங்கியுள்ளன.

செம்மணியில் மீட்கப்பட்ட மோதிரம் - விரையும் ஐரோப்பியத் தூதுவர் குழு

செம்மணியில் மீட்கப்பட்ட மோதிரம் - விரையும் ஐரோப்பியத் தூதுவர் குழு

தற்காலிக ஏற்பாடாக வந்த சட்டம்

ஈழ விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் பெரும் எழுச்சி கொண்டிராத காலப் பகுதியாக எழுபதுகளின் இறுதியை கருதலாம்.

தனிச்சிங்கள சட்டம் அதனை தொரடந்து முன்னெடுத்த இனப்படுகொலைகளும் தனி ஈழமே தீர்வு என்ற நிலைக்கு தமிழர்களை தள்ளிய காலத்தில் குறிப்பாக தமிழ் இளைஞர்களை கபளீகரம் செய்கிற நோக்கில் சிங்கள அரசால் பயங்கரவாத தடைச்சட்டம் உருவாக்கப்பட்டது.

1979ஆம் ஆண்டு ஜூலை 17ஆம் நாள் ஸ்ரீலங்கா பாராளுமன்றத்தில் 48ஆவது இலக்க பயங்கரவாத தடைச்சட்டம் ஒரு தற்காலிக ஏற்பாடாகத்தான் நிறைவேற்றப்பட்டது. ஆனால் அதுவே இன்றைக்கு 47 ஆண்டுகள் கடந்தும் தமிழ் மக்களை அடக்கி ஒடுக்கி அழித்து வருகிறது.

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் ஈழத் தமிழர்கள் கீழ்த்தரமான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்படுவதாகவும் தமிழ் சிறுபான்மை மக்களையே பயங்கரவாதத் தடைச்சட்டம் பாதிப்பதாகவும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்றும் கடந்த காலத்தில்  இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு பயங்கரவாதத் தடைச்சட்டம் தொடர்பில் ஆராய்ந்த ஐ.நாவின் விசேட நிபுணர் பென் எமர்சன் கூறியிருந்தார்.

எமர்சன் வருகை தந்த காலத்தில் நடைமுறையில் இருந்த ரணில் – மைத்திரிபால சிறிசேன அரசாங்கம் பயங்கரவாதத் தடைச்சட்டம் மிகவும் கொடுமையானது என்பதை பகிரங்கமாக ஏற்றிருந்தது.

கொடிய சட்டமான PTA கொண்டுவரப்பட்டு இன்றுடன் 47 ஆண்டுகள்… | Terrorism Act Pta

மண்மேடு சரிந்து விழுந்ததில் நபர் ஒருவர் உயிரிழப்பு

மண்மேடு சரிந்து விழுந்ததில் நபர் ஒருவர் உயிரிழப்பு

பயங்கரவாதத் சட்டம் என்றால் என்ன?

இது உதிரத்தை உறைய வைக்கும் மனதை நடுங்கச் செய்யும் விரிவாக இருக்கலாம். பயங்கரவாத விசாரணைப் பிரிவு, பொலிஸ் மற்றும் பாதுகாப்பு அமைச்சிற்கு கைது செய்தல், விசாரணை செய்தல், ஒப்புதல் வாக்குமூலம் பெற்றுக் கொள்ளல் என்பவை தொடர்பில் பரந்தளவிலான அதிகாரத்தை பயங்கரவாத தடைச்சட்டம் மற்றும் அவசரகால சட்ட விதிமுறை வழங்குகிறது.

சந்தேகத்தின் அடிப்படையிலேனும் கைது செய்வதற்கான பிடியாணையை பிறப்பிக்க முடியும். விசாரணைக்காக நபர் ஒருவரை வெவ்வேறு இடங்களுக்குக் கொண்டுச் செல்கின்ற நிலையில் நீதிமன்ற வழிநடத்தல் இன்றி சொத்துக்களை முடக்க முடியும். சந்தேக நபரை தடுத்து வைப்பதன் கால எல்லையை 18 மாதங்களாக நீடிக்க முடியும்.

எனினும், பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்படும் ஒருவர் வழக்கு விசாரணை முடியும் வரை கால வரையரையின்றி தடுத்து வைக்கும் நிலையே நடைமுறையில் உள்ளது. கைதாகி சிறையில் உள்ளபோது பாரிய மற்றும் கீழ்த்தரமான சித்திரவதைகள் இடம்பெறுகின்றன.

நீதிமன்றங்களின் கவனத்திற்கு கொண்டு வருகின்ற சம்பவங்கள் மிகவும் அரிதாகவே இடம்பெறுகின்றன. நீதிமன்றங்களினாலும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பில் உரிய கவனம் செலுத்த அதிகாரமற்றும் அந்த நடவடிக்கைக்கு இணக்கம் செய்யும் நிலையுமே நடைமுறையில் உள்ளது.

பயங்கரவாதத் தடைச்சட்டத்தைப் பொறுத்தவரையில் நீதிமன்றத்தை பாதுகாப்பு அமைச்சின் கீழ் செயற்படும் ஒரு நிறுவனமாகவே கருகிறது. சிறுபான்மை தமிழ் இன மக்களுக்கான நீதி மறுத்து அவர்கள்மீதான மனித உரிமை மீறலை நியாயப்படுத்தியும் எதையும் செய்யும் அதிகாரத்தை இச் சட்டம் வழங்குகிறது. 

கொடிய சட்டமான PTA கொண்டுவரப்பட்டு இன்றுடன் 47 ஆண்டுகள்… | Terrorism Act Pta

 PTA ஏன் கொண்டுவரப்பட்டது?

தமிழ் மக்களை தொடர்ந்தும் ஒடுக்கி ஆளும் ஒரு அரசு, அந்த ஒடுக்குமுறைக்கு எதிராக அவர்கள் கிளர்ந்தெழாமல் தடுத்து ஒடுக்க இந்தச் சட்டம் தேவை என்று கருதுவதன் காரணமாகவே இந்தச் சட்டத்தை எப்படியோ நடைமுறையில் வைத்திருக்க வேண்டும் என்று கருதுகிறது.

அத்துடன் பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு புதிய வடிவம் கொடுத்து அதனை தொடர்ந்தும் தீவிரப்படுத்த முனைவதே இங்கு ஈழத் தமிழ் இனம் சந்திக்கப் போகும் ஆபத்தாகும். ஈழத் தமிழர்களின் தனிநாட்டு உரிமைப் போராட்டத்தை ஒடுக்கும் சட்டத்தையே இலங்கை அரசு பயங்கரவாதத் தடைச்சட்டம் என்று அழைக்கிறது.

 தமிழ் மக்களின் சுய உரிமையை அவர்களிடமே கையளித்தல், அவர்களின் தாயகப் பிரதேசத்தில் அவர்களே ஆட்சி புரிதல், அவர்களின் தாயகத்தை அபகரிக்காது விடுதல், அவர்கள் மீதான இன ஒடுக்குமுறை மற்றும் இன அழிப்புச் செயல்களை நிறுத்திக் கொள்ளல் என்பனவற்றை மேற்கொள்ள வேண்டிய நிலையில், தொடர்ந்தும் இக் கொடிய சட்டத்தை தொடர்ந்து ஈழத் தமிழர்களை ஒடுக்குவதில்தான் ஶ்ரீலங்கா அரசு கடும் கண்ணாயிருக்கிறது.

யாழில் பாழடைந்த கட்டிடத்திலிருந்து பெருமளவிலான கஞ்சா மீட்பு!

யாழில் பாழடைந்த கட்டிடத்திலிருந்து பெருமளவிலான கஞ்சா மீட்பு!


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


பொறுப்பு துறப்பு!

இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Theepachelvan அவரால் எழுதப்பட்டு, 18 July, 2026 அன்று ஐபிசி தமிழ் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் ஐபிசி தமிழ் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

ReeCha
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

கம்பர்மலை, யாழ் ஊரெழு மேற்கு, Jaffna, Scarborough, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Saint Margrethen, Switzerland

28 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026