அமெரிக்காவை உலுக்கிய துப்பாக்கி சூட்டு சம்பவம்
அமெரிக்காவில் (United States) பாடசாலை வளாகத்தில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்காவின் மின்னசோட்டா மாகாணத்தில் உள்ள மினியபோலிஸ் கத்தோலிக்க பாடசாலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிவருகையில், நேற்று (27) காலை மாணவர்களுக்கான வழக்கமான பிரார்த்தனை கூட்டம் இடம்பெற்றுள்ளது.
துப்பாக்கி சூடு
அப்போது பாடசாலை வளாகத்திற்குள் துப்பாக்கியுடன் புகுந்த நபர் ஒருவர், அங்கிருந்தவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார்.
இதனால் ஆசிரியர்களும் மற்றும் மாணவர்களும் அலறியடித்துக் கொண்டு நாலாபுறமும் சிதறி ஓடியுள்ளனர்.
தாக்குதல்
இந்த தாக்குதல் சம்பவத்தில் இரண்டு பேர் உயிரிழந்த நிலையில், 20 இற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், துப்பாக்கி சூடு நடத்திய நபரை சுட்டுக் கொன்றுள்ளனர்.
இதையடுத்து, படுகாயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

