களுத்துறையில் ஒருவர் வெட்டிப் படுகொலை - விசாரணை தீவிரம்..!
Sri Lanka Police
Death
By Kiruththikan
பலாதொட்ட – கொடபராகாஹேன பகுதியில் நேற்றிரவு ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்று களுத்துறை தெற்கு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த பகுதியில் வசிக்கும் திருமணமாகாத 43 வயதுடைய சுஜித் தர்மசேன என்ற நபரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
உயிரிழந்த நபர் தனது வீட்டுக்கு அருகில் நடந்து சென்ற வேளையிலேயே இவ்வாறு தாக்குதலுக்குள்ளாகி தலை மற்றும் கழுத்துப் பகுதிகளில் காயங்களுக்குள்ளாகியுள்ளார்.
தனிப்பட்ட தகராறு
தனிப்பட்ட தகராறு காரணமாக இந்தக் கொலை இடம்பெற்றிருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகிப்பதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
