பலாப்பழத்தை நம்பிவாழும் தாயும் பிள்ளைகளும் -தாய்ப் பாலூட்டவும் உணவின்றி தவிப்பு
Jack Fruit
Sri Lanka Economic Crisis
Sri Lanka
Sri Lanka Food Crisis
By Sumithiran
இரண்டு சிறு பிள்ளைகளுடன் பலாப்பழத்தை நம்பி வாழும் தாய் ஒருவர் கடுவெல சந்தி பிரதேசத்தில் வாழ்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த 36 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயான இவருக்கு ஒரு மாதக் குழந்தையும் நான்கு வயது ஆண் குழந்தையும் உள்ளதுடன், கணவன் பிரிந்து சென்றதால் வாடகை அறையில் வசித்து வருகிறார்.
தாய்ப்பால் கொடுக்க முடியவில்லை
சரியான உணவு முறை இல்லாததால், ஒரு மாத பெண் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க முடியவில்லை என்றும், பல நாட்களாக குழந்தைகளுக்கு பலாப்பழம் மட்டுமே வழங்கப்பட்டு வருவதாகவும் கண்ணீருடன் கூறினார்.
வாடகை கட்ட முடியாமல்
இந்த மாத அறைக்கான வாடகையை கட்ட முடியவில்லை என்றும், முந்தைய வீட்டின் மாத வாடகைக்காக சமையலுக்கு பயன்படுத்திய காஸ் சிலிண்டர், அடுப்பு ஆகியவற்றை வீட்டின் உரிமையாளர்களிடம் கொடுத்து விட்டதாகவும் கூறினார்.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்