எரிபொருள் QR குறியீட்டைப் பெற முடியாதவர்களுக்கு புதிய தீர்வு!

Sri Lanka Fuel Crisis National Fuel Pass QR Code
By Sathangani Mar 19, 2026 05:24 AM GMT
Report

நாட்டில் எரிபொருள் விநியோகத்திற்காக தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள QR குறியீட்டைப் பெற்றுக்கொள்வதில் சிக்கல் உள்ளவர்களுக்காக மற்றுமொரு தீர்வு வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, வேறு தொலைபேசி இலக்கங்களின் கீழ் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கான எரிபொருள் QR குறியீடுகளை மீளப் பெற்றுக்கொள்வதற்காக இன்று (19) முதல் புதிய நடைமுறையொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த 2026 மார்ச் 14 ஆம் திகதிக்கு முன்னர் பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் QR குறியீட்டை மீளப் பெறும் போது, அந்தப் பதிவை மேற்கொண்ட தொலைபேசி இலக்கம் பயன்பாட்டில் இல்லாமை அல்லது வேறு ஒருவரிடம் இருப்பதனால் பொதுமக்கள் எதிர்கொண்ட அசௌகரியங்களைத் தவிர்க்கும் வகையில் இந்த புதிய அம்சம் அமைப்பில் சேர்க்கப்பட்டுள்ளது.

நாட்டில் மின்சாரம் வழங்குவதில் பாரிய சிக்கல்

நாட்டில் மின்சாரம் வழங்குவதில் பாரிய சிக்கல்

வாகனத்தின் அடையாளத்தை உறுதிப்படுத்தல்

உங்கள் வாகனத்தின் அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்காக வாகன இலக்கம் மற்றும் சேஸி இலக்கத்தை சரியாக உள்ளிடுவதன் மூலம் மாத்திரமே இந்த புதிய வசதியைப் பயன்படுத்த முடியும்.

எரிபொருள் QR குறியீட்டைப் பெற முடியாதவர்களுக்கு புதிய தீர்வு! | A New Solution For Trouble In Getting Fuel Qr Code

வாகனம் ஏற்கனவே வேறொரு இலக்கத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டிருந்தாலும் (பதிவு 2026 மார்ச் 14க்கு முன்னதாக இருத்தல் வேண்டும்), உங்களிடமுள்ள சரியான தகவல்களை உள்ளிட்டு தற்போதுள்ள பதிவை இரத்து செய்து, உங்களது புதிய தொலைபேசி இலக்கத்தின் கீழ் பதிவு செய்துகொள்ள முடியும்.

நீங்கள் 'Override' எனும் தெரிவைத் தேர்ந்தெடுக்கும்போது, அந்த வாகனத்துடன் தொடர்புடைய பழைய கணக்கு தரவுத்தளத்திலிருந்து நீக்கப்பட்டு, உங்கள் தகவல்களுடனான புதிய கணக்கு உடனடியாகச் செயற்படுத்தப்படும்.

ஈரானுக்கு எதிராக இராணுவ நடவடிக்கை : சவுதி அரேபியா எச்சரிக்கை

ஈரானுக்கு எதிராக இராணுவ நடவடிக்கை : சவுதி அரேபியா எச்சரிக்கை

டிஜிட்டல் பொருளாதார அமைச்சு

இந்தச் செயற்பாட்டின் மூலம் ஏற்கனவே இருந்த பதிவு இரத்து செய்யப்படுவதால், முந்தைய பயனருக்கு அந்த வாகனத்திற்காகக் கிடைத்த சலுகைகள் மற்றும் அணுகல் இல்லாது ஒழியும்.

எரிபொருள் QR குறியீட்டைப் பெற முடியாதவர்களுக்கு புதிய தீர்வு! | A New Solution For Trouble In Getting Fuel Qr Code


இதன் மூலம் இதுவரை காலம் வேறு தரப்பினரிடமோ அல்லது பயன்பாட்டில் இல்லாத தொலைபேசி இலக்கங்களின் கீழே பதிவு செய்யப்பட்டிருந்த வாகனங்களின் உரிமையாளர்கள், தடையின்றித் தமது QR குறியீட்டைப் பெற்றுக்கொள்ள முடியும்.

தமக்கு சட்டபூர்வமான உரிமை இல்லாத வேறொருவருக்குச் சொந்தமான வாகனத்தின் QR தரவுகளை நீக்குவது தண்டனைக்குரிய குற்றமாகும் என டிஜிட்டல் பொருளாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

கார்த்திகை தீபமாக இஸ்ரேலை காட்சியளிக்க வைத்த ஈரானின் கொடிய தாக்குதல்

கார்த்திகை தீபமாக இஸ்ரேலை காட்சியளிக்க வைத்த ஈரானின் கொடிய தாக்குதல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
நினைவஞ்சலி
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017