யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு சென்றவர் வவுனியாவில் கைது
யாழ்ப்பாணத்திலிருந்து சொகுசு பேருந்தில் சென்றவரை வவுனியாவில் வைத்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
யாழில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற சொகுசு பேருந்தில் கஞ்சா கடத்தியதாக தெரிவித்தே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சொகுசு பேருந்தில்
குறித்த பேருந்தில் கஞ்சா கடத்தப்படுவதாக வவுனியா காவல்துறை புலனாய்வு பிரிவிற்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து வவுனியா மணிக்கூட்டு கோபுர சந்தியில் நேற்று காலை சோதனையில் ஈடுபட்ட காவல்துறையினர் குறித்த பேருந்தை வழிமறித்து அதில் சோதனைகளை முன்னெடுத்தனர்.
இதன்போது பேருந்தில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் காணப்பட்ட 1 கிலோ 900 கிராம் கேரள கஞ்சாவினை மீட்டனர். அதனை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டார்.
ஏற்கனவே கைது
அவர் ஏற்கனவே கஞ்சா கடத்திய குற்றச்சாட்டில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருந்ததாக வவுனியா காவல்துறையினர் தெரிவித்தனர்.
சம்பவத்தில் கொழும்பைச் சேர்ந்த 51 வயதான நபரே கைது செய்யப்பட்டதுடன் அவரிடம் விசாரணைகளை மேற்கொண்டுவரும் காவல்துறையினர்அவரை நீதிமன்றில் முற்ப்படுத்துவற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தனர்.
