டயானா கமகேவுக்கு எதிரான வழக்கு: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
முன்னால் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு (Diana Gamage) எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் சாட்சியங்களின் விசாரணையை அடுத்த ஆண்டு ஜனவரி 09 ஆம் திகதி ஆரம்பிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் (Colombo High Court) உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன முன்னிலையில் இன்றையதினம் (04.11.2024) இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது இந்த உத்தரவு பிரப்பிக்கப்பட்டுள்ளது.
குற்றப்பத்திரிகை
மேலும், இந்த வழக்கு தொடர்பான வழக்குப் பொருட்களை பாதுகாப்பாக பாதுகாப்பாக வைக்குமாறும் காவல்துறையினருக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன், முறைப்பாடு 01, 04, 12 ஆகிய சாட்சிகளுக்கு சாட்சியமளிக்குமாறு அழைப்பானை அனுப்பவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
2004 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 09 ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 01 ஆம் திகதி வரை பாணந்துறை (Panadura) மற்றும் கொழும்பில் (Colombo) போலியான தேசிய அடையாள அட்டையை முன்வைத்து இலங்கை கடவுச்சீட்டை மோசடி செய்தமைக்காக டயானா கமகேவிற்கு எதிராக சட்டமா அதிபர் இந்த குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |