சுமந்திரனுக்கு எதிராக சாள்ஸ் நிர்மலநாதன் காவல் நிலையத்தில் முறைப்பாடு

Sri Lanka Police Mannar M. A. Sumanthiran Charles Nirmalanathan
By Shadhu Shanker Nov 04, 2024 12:41 AM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in அரசியல்
Report

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் உண்மைக்கு புறம்பாக தனக்கு எதிராக அவதூறு பரப்பும் வகையில் கருத்துக்களை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றில் வெளியிட்டமை தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலதான் (Charles Nirmalanathan) மன்னார் காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

மன்னார் (Mannar) தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் நேற்று (3) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் “தான் மதுபான சாலைக்கு சிபாரிசு கடிதம் வழங்கியதாகவும் அதை நான் வெளிப்படையாக ஒப்புகொண்டதாகவும் உண்மைக்கு புறம்பான கருத்தை எனக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் சுமந்திரன் கூறியிருந்தார்.

இந்த கருத்தை அவர் கூறிய சமயம் நான் இந்தியாவில் இருந்தமையினால் இன்று நான் மன்னார் வந்தவுடன் உண்மைக்கு புறம்பான கருத்தை வெளியிட்டமை தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு காவல் நிலையத்தில் அவருக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளேன்.

புலம்பெயர்ந்த தமிழர்களை இலக்கு வைத்து இந்தியா தீட்டும் இரகசிய திட்டம்

புலம்பெயர்ந்த தமிழர்களை இலக்கு வைத்து இந்தியா தீட்டும் இரகசிய திட்டம்

காவல் நிலையத்தில் முறைப்பாடு 

புலம்பெயர் தமிழர்கள் பலர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் சந்திப்பை மேற்கொள்வதற்கான உதவிகளை கோரிய போது அவர்களின் தேவைகளின் நிமித்தம் நான் அந்த சந்திப்புக்களை மேற்கொள்வதற்கான உதவிகளை செய்து கொடுத்தேன்.


அவ்வாறு சந்தித்தவர்களில் தனிப்பட்ட பழக்கத்தின் காரணமாக யாரும் அந்த வாய்ப்பை பயன்பத்தி மதுபான சாலைகளை அமைப்பதற்கான அனுமதியை பெற்றிருந்தால் நான் அதற்கு பொறுப்பாக முடியாது என்பதை நான் அன்மையில் ஒரு ஊடகவியளாலரின் கேள்விக்கு பதிலாக வழங்கியிருந்தேன்.

ஆனாலும் சுமந்திரன் உண்மைக்கு புறம்பாக நான் எழுத்து மூல சிபாரிசு வழங்கியதாகவும் அதை ஒத்துக்கொண்டதாகவும் சொன்ன கருத்தை வன்மையாக கண்டிப்பதோடு காவல்துறையினர் குறித்த விடயத்தில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

அதனால் தான் தனக்கு இம்முறை ஆசனம் வழங்கவில்லை என சுமந்திரன் குறிப்பிடுவதாகவும் அது முற்றிலும் பொய் எனவும் 2020 ஆண்டில் இருந்தே கட்சியில் செயற்பாடுகளில் இருந்த அதிருப்தி காரணமாக உளவியல் ரீதியாக கட்சியோடு பயணிப்பதா இல்லையா என்ற மனநிலை இருந்து வந்ததாகவும் அதேநேரம் எனது சுயவிருப்பத்தினாலும் உடல் நல பிரச்சினைகளாலும் இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதாலும் நானாக மேற்கொண்ட முடிவே அது.

குறிப்பாக சுமந்திரன் 2020 ஆண்டுக்கு பிறகு விடுதலைப் புலிகளுக்கு எதிரான கருத்துக்களை தொடர்ந்து தெரிவித்து வந்த நிலையில் அவருக்கு எதிராக தான் சம்பந்தனுக்கு கடிதம் எழுதியதாகவும் சுமந்திரன் ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து கொண்டு இவ்வாறான கருத்துக்களை தெரிவிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவருக்கு எக்காரணம் கொண்டும் கட்சியின் பதவி நிலைகள் வழங்க கூடாது எனவும் எழுத்து மூலமாக சம்பந்தன் ஐயாவுக்கு எழுதியிருந்தேன்.

பதுளை கோர விபத்து தொழில்நுட்பக் கோளாறா- கவனயீனமா! தீவிர விசாரணையில் காவல்துறையினர்

பதுளை கோர விபத்து தொழில்நுட்பக் கோளாறா- கவனயீனமா! தீவிர விசாரணையில் காவல்துறையினர்

தமிழரசு கட்சி 

அத்துடன் கடந்த 2020 ஆண்டு தேர்தலின் போது சுமந்திரன் வன்னியில் ஏறும் எந்த அரசியல் மேடைக்கும் நான் ஏற மாட்டேன் என தெரிவித்திருந்தேன் அதே போன்று எந்த அரசியல் மேடையிலும் ஏறவில்லை அதன் காரணம் என்ன என்றால் சுமந்திரன் பிரசாரம் செய்து அதில் ஒரு வாக்கு விழுந்து நான் வெற்றி பெற கூடாது என்பதற்காகவே அவ்வாறான நிலையில் அவர் எனக்கு எதிராக பல வேலைகள் செய்திருந்தார்.

சுமந்திரனுக்கு எதிராக சாள்ஸ் நிர்மலநாதன் காவல் நிலையத்தில் முறைப்பாடு | Charles Nirmalanathan Files Complaint Sumanthiran

இருந்தாலும் வன்னி தேர்தல் தொகுதியில் தமிழரசுக் கட்சி சார்பாக அதிக வாக்குகளை பெற்று நான் வெற்றி பெற்றேன் அதே நேரம் அண்மையில் கட்சியின் தலைமைத்துவம் சம்மந்தப்பட்ட விடயத்தில் சுமந்திரன் தலைவராக வந்துவிட கூடாது என்பதற்காக நான் நேரடியாகவே சிறீதரனுக்கு ஆதரவாக செயற்பட்டதுடன் சுமந்திரன் தலைவராக வரமுடியாமைக்கு நான் பெரும் பங்காற்றியிருந்தேன் அதுவும் அவருக்கு நன்றாக தெரியும்.

இப்படியாக கட்சியில் இருந்த அதிருப்தியான நிலைமை காரணமாகவே இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்குவதற்காக தேர்தலில் போட்டியிடவேண்டாம் என தீர்மானித்திருந்தேன். சுமந்திரனுடன் 2020 ஆண்டில் இருந்தே முரண்பாடுகளோடுதான் பயணித்தேன் இவ்வாறு இருக்க இந்த தேர்தலில் சுமந்திரனுக்கு அடிமையாக தேர்தல் கேட்க முடியாது.

என்னை பொறுத்த வரையில் வன்னி மாவட்டம் திருகோணமலை மாவட்டம் அம்பாறை மாவட்டத்தில் தமிழ் பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்படவேண்டும் ஏன் என்றால் இந்த பகுதிகளில் சிங்கள முஸ்லிம் அரசியல் வாதிகளின் ஆதிக்கம் அதிகரித்து வருகின்றது.

ஆனாலும் சுமந்திரனின் இவ்வாறான தொடர்சியான செயற்பாடுகளால் கட்சி அங்கத்தவர்களும் மக்களும் புலம்பெயர் அமைப்புக்களும் மன விரக்தியில் இருக்கிறார்கள் என்பதை பதிவு செய்கின்றேன்.

பதுளை கோர விபத்து தொழில்நுட்பக் கோளாறா- கவனயீனமா! தீவிர விசாரணையில் காவல்துறையினர்

பதுளை கோர விபத்து தொழில்நுட்பக் கோளாறா- கவனயீனமா! தீவிர விசாரணையில் காவல்துறையினர்

பகிரங்க சவால் 

அதேநேரம் சுமந்திரனுக்கும் அவர் சார்ந்தவர்களுக்கும் ஒன்றை தெரிவித்து கொள்கின்றேன் நான் எந்த ஒரு மதுபான சாலைக்கும் அனுமதி பெறவும் இல்லை யாருக்கும் சிபாரிசும் செய்யவில்லை எனக்கு அறிமுகமானவர்கள் அதை பெற்றிறுந்தால் அது அவர்களின் தனிப்பட்ட விடயம் அதற்கு நான் எந்த சிபாரிசு கடிதம் கொடுக்கவில்லை.

சுமந்திரனுக்கு எதிராக சாள்ஸ் நிர்மலநாதன் காவல் நிலையத்தில் முறைப்பாடு | Charles Nirmalanathan Files Complaint Sumanthiran

அதே நேரம் தேர்தல் நியமனத்திற்காக நான் தேர்தல் கேட்பதாக விண்ணப்பிக்கவில்லை. அதே நேரம் தற்போது இருக்கும் தமிழரசுக் கட்சி நிர்வாகத்தோடு பயணிக்க முடியாது என்பதுடன் சுமந்திரன் சொல்லும் எல்லாவற்றுக்கும் தலையாட்டி கொண்டு இருக்க முடியாது என்பதால் தேர்தலில் இருந்து நானாக தான் விலகினேன்.

சுமந்திரன் தலைவராவதில் ஏற்பட்ட பிரச்சினை மற்றும் பல்வேறு வன்மத்தை மனதில் வைத்தே முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனும் அவர் சார்ந்தவர்களும் தொடர்ந்து சேறு பூசும் நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள் .

அதே நேரம் சுமந்திரனுக்கு நான் பகிரங்க சவால் விடுக்கின்றேன் நான் வழங்கிய சிபாரிசு கடிதத்தை அவர் கொண்டு வந்தால் நான் அவர் சொல்வதை செய்கின்றேன்” எனவும் தெரிவித்தார்.

வலுக்கும் முறுகல் நிலை - மீண்டும் இந்தியாவை சீண்டும் கனடா

வலுக்கும் முறுகல் நிலை - மீண்டும் இந்தியாவை சீண்டும் கனடா

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!                      
ReeCha
மரண அறிவித்தல்

London, United Kingdom, Hayling Island, United Kingdom

19 Mar, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Muscat, Oman, Toronto, Canada

05 Apr, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொக்குவில், மட்டக்களப்பு, அண்ணா நகர், India, London, United Kingdom

27 Mar, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், Bad Marienberg, Germany, Hayes, United Kingdom

31 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Kingsbury, United Kingdom

19 Mar, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், பரிஸ், France, சூரிச், Switzerland

10 Apr, 2022
கண்ணீர் அஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொழும்பு

05 Apr, 2025
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, சென்னை, India, Toronto, Canada

03 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Scarborough, Canada

05 Apr, 2020
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, Bochum, Germany

29 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

05 Apr, 2015
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கொழும்பு, யாழ்ப்பாணம், Montreal, Canada

05 Apr, 2024
மரண அறிவித்தல்

முனைத்தீவு, New Jersey, United States

02 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Neuilly-sur-Marne, France

18 Mar, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், வவுனியா, செட்டிக்குளம்

30 Mar, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Neuss, Germany

06 Apr, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பரிஸ், France

30 Mar, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

06 Mar, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, வவுனிக்குளம், Toronto, Canada

02 Apr, 2025
மரண அறிவித்தல்

வீமன்காமம் வடக்கு, யாழ்ப்பாணம், பரிஸ், France, Ajax, Canada

03 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Le Bourget, France

04 Apr, 2020
13ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி, தெல்லிப்பழை

04 Apr, 2015
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, உடுவில், கொழும்பு, Brampton, Canada

25 Mar, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 5ம் வட்டாரம், Toronto, Canada

31 Mar, 2025