அமெரிக்காவின் முதன்மை விமானம் தாங்கி கப்பலில் பற்றியது தீ!
அமெரிக்க கடற்படையின் முதன்மை விமானம் தாங்கி கப்பலான USS Gerald R. Ford (CVN 78) இல் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஈரானுக்கு எதிரான போரில் குறித்த கப்பல் செங்கடலில் இயக்கப்பட்டு வருகிறது.
எவ்வாறாயினும் ,தீ உடனடியாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளை அறிவித்துள்ளது.
சேதம்
இதேவேளை, தீ விபத்து தற்செயலானது என்றும் அது போருடன் தொடர்புடையது அல்ல என்றும் அமெரிக்க கடற்படை தெளிவுபடுத்தியுள்ளது.
On March 12, USS Gerald R. Ford (CVN 78) experienced a fire that originated in the ship’s main laundry spaces. The cause of the fire was not combat-related and is contained.
— U.S. Naval Forces Central Command/U.S. 5th Fleet (@US5thFleet) March 12, 2026
There is no damage to the ship’s propulsion plant, and the aircraft carrier remains fully operational.…
அத்தோடு, தீ விபத்தில் கப்பலின் இயந்திரம் மற்றும் உந்துவிசை அமைப்புக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை என்றும் கப்பல் தனது பணியை தொடர தயார் நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
பொதுவான ஆபத்து
மேலும், தீ விபத்தில் கப்பலில் இருந்த இரண்டு மாலுமிகள் காயமடைந்ததாகவும், ஆனால் அவர்களின் நிலை மோசமாக இல்லை என்றும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

Image Credit: Mathrubhumi English
கப்பல்களில் ஏற்படும் தீ விபத்துகளைக் கையாள்வதில் அமெரிக்க கடற்படை நீண்ட வரலாற்றைக் கொண்டிருப்பதாகவும் இவை பாரிய இயந்திரங்கள் மற்றும் அதிக செயல்பாட்டு வேகத்தைக் கொண்ட கப்பல்களில் பொதுவான ஆபத்துகள் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |