இலங்கையின் கல்வி முறையில் ஏற்படப்போகும் மாற்றம்! கல்வி அமைச்சு வெளியிட்ட தகவல்
இலங்கையில் கல்வியை டிஜிட்டல் மயமாக்கும் முன்னோடித் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
காலி தவலம வித்யாராஜா தேசிய பாடசாலையில் புதிய தொழிநுட்ப பீட கட்டடத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் குறித்த முன்னோடித் திட்டத்தை எதிர்வரும் மார்ச் மாதம் முதல் ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனுடன் ஆசிரியர்களுக்கான பயிற்சியும் ஒரே நேரத்தில் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கல்வி அமைச்சு
மேலும், இவ்வருடம் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுக்கு ஆங்கில மொழி வழிகாட்டல் மற்றும் தொழில்சார் பாடம் ஒன்றை இலவசமாகக் கற்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த நடவடிக்கையானது அடுத்த மாதம் ஐந்தாம் திகதி முதல் முன்னெடுக்கப்படுமென குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி நாடளாவிய ரீதியில் 300 நிலையங்களைப் பயன்படுத்தி இந்தப் பயிற்சித் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் whatsapp இல் இணைந்து கொள்ளுங்கள்...! |