படுகொலையில் பாதிக்கப்பட்ட தமிழீழப் பெண்களின் எழுச்சி நாள் : வெளியான அறிக்கை

Sri Lanka Sri Lanka Final War Denmark
By Shalini Balachandran Oct 10, 2024 05:39 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in சமூகம்
Report

2009 மே மாதம் 18 வரை முள்ளிவாய்க்கால் மண்ணில் நடந்தேறிய 21 ஆம் நூற்றாண்டின் மிகக் கொடிய மனித படுகொலையில் நேரடியாகவும் மறைமுகமாகவும் பெரிதும் பெண்களே பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என டென்மார்க் மகளிர் அமைப்பு (Denmark Women's Organization) சுட்டிக்காட்டியுள்ளது.

குறித்த விடயத்தை தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளான முன்னிட்டு டென்மார்க் மகளிர் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “தமிழீழ விடுதலைப்போராட்டம் என்பது மண் விடுதலையை மட்டும் குறியீடு செய்வதல்ல அது காலங்காலமாக எமது மண்ணில் ஆழவேரூன்றிய மூடக்கொள்கைகளையும், சமுதாயச்சிறைகளையும் தகர்த்து முற்போக்கான கொள்கைகளை வரித்து, அறிவார்ந்த சமுதாயம் ஒன்றை உருவாக்கும் உயரிய நோக்கம் கொண்டது இதன் வெளிப்பாடாகத் தோற்றம் பெற்றதே தமிழீழப்பெண்களின் எழுச்சி.

கே.வி. தவராசா தலைமையில் புதிய கூட்டணி

கே.வி. தவராசா தலைமையில் புதிய கூட்டணி

தமிழீழப் பெண்கள் 

தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் வழிகாட்டலிலே உருவாகி எமது மண்ணிலே அரும்பணி புரிந்து மாபெரும் தற்கொடையையும் புரிந்து சென்ற போராளிகளிலே முதல் பெண்போராளியாக வீரகாவியம் படைத்த இரண்டாம் லெப்டினன் மாலதி அவர்கள் வீரச்சாவைத் தனதாக்கிக் கொண்ட நாளையே நாம் தமிழீழப்பெண்கள் எழுச்சி நாளாகக் கொள்கிறோம்.

நீண்ட கால ஆக்கிரமிப்புக்கும், கொடிய போருக்கும் தமிழீழப் பெண்கள் முகம் கொடுத்து தமது நுண்ணிய ஆற்றலினால் அனைத்து தடைகளையும் அறுத்தெறிந்து, அனைத்து துறைகளிலும் தம்மை வளர்த்து, தமிழ்த் தேசிய உணர்வுகளை கட்டியெழுப்பி பெண்ணெழுச்சிக்கு வித்திட்டுள்ளார்கள்.

படுகொலையில் பாதிக்கப்பட்ட தமிழீழப் பெண்களின் எழுச்சி நாள் : வெளியான அறிக்கை | A Report On Tamil Eelam Women Uprising Day

போரியலில், அரசியலில், நிர்வாகங்களில், கட்டுமானங்களில் என அனைத்துத் துறைகளிலும் பெண்கள் நட்சத்திரங்களாக மிளிர்ந்தனர். பெண்களின் இந்த எழுச்சி குமுகாயத்திலும் பல மாற்றங்களை ஏற்படுத்தியது, பெண்கள் தனித்துவமாகச் செயற்பட்டனர்.

பணி முடிந்து எந்த நேரத்திலும் அச்சமின்றி வீடு திரும்பினர் பெண்கள், சிறுவர்களின் பாதுகாப்பு என்பது மே 2009 இற்கு முன்பு உயர்நிலையில் இருந்தது ஆனால் இன்று அங்கே வாழும் பெண்கள் தமக்கு நடக்கும் கொடுமைகளை வெளியில் சொல்லமுடியாத துர்ப்பாக்கிய நிலையில் உள்ளார்கள்.

தாமரை கோபுரத்திலிருந்து விழுந்து உயிரிழந்த மாணவி : வெளியான புதிய தகவல்

தாமரை கோபுரத்திலிருந்து விழுந்து உயிரிழந்த மாணவி : வெளியான புதிய தகவல்

முள்ளிவாய்க்கால் மண்

இன்று ஒரு பெண் பிள்ளை தெருவில் தனியாக நடந்து செல்ல முடியாத ஒரு நிலை தமிழீழத்தில் உருவாகியுள்ளது இதனால் பெற்றோர்கள் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகிக் கொண்டிருக்கிறார்கள். 

எல்லோருடைய மனங்களிலும் எங்களைக் கட்டி காத்து, பாதுகாப்பு தந்தவர்கள் எப்பொழுது திரும்பி வருவார்கள் என்ற ஏக்கம் இருப்பதை உணரக்கூடியதாக உள்ளது.

படுகொலையில் பாதிக்கப்பட்ட தமிழீழப் பெண்களின் எழுச்சி நாள் : வெளியான அறிக்கை | A Report On Tamil Eelam Women Uprising Day

இவை எல்லாவற்றுக்கும் மேலாக 2009 மே மாதம் 18 வரை முள்ளிவாய்க்கால் மண்ணில் நடந்தேறிய 21 ஆம் நூற்றாண்டின் மிகக் கொடிய மனித படுகொலை வரை பெண்களே நேரடியாகவும் மறைமுகமாகவும் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

போரில் பல பெண்கள் சிறிலங்கா இராணுவத்தின் சித்திரவதைகளின் பின் படுகொலை செய்யப்பட்ட ஆதாரங்கள் பல வெளியாகி இருக்கின்றன இதைவிட 2009 மே போரின் போது சிறிலங்கா இராணுவத்திடம் சரண்டைந்து காணாமல் ஆக்கப்பட்ட பெண்கள் என்ன ஆனார்கள் என்று இதுவரை தெரியவில்லை.

ஐ.நா தீர்மானத்தை நிராகரிக்கும் அநுர அரசு - வட மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சாடல்!

ஐ.நா தீர்மானத்தை நிராகரிக்கும் அநுர அரசு - வட மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சாடல்!

பாலியல் வன்கொடுமை 

இன்றும் பெண்கள், சிறுவர்கள் மீதான பாலியல் வன்கொடுமை அரங்கேறிக் கொண்டே இருக்கிறது பெண்கள், குழந்தைகளுக்கான பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகி நிற்கிறது.

இளையவர்களை இலக்கு வைத்த குமுகாய சீர்கேடுகள், போதைப்பொருள் பாவனை என்பன முன்னெப்போதும் இல்லாதவகையில் உச்சம் பெற்றிருக்கின்றன. 

படுகொலையில் பாதிக்கப்பட்ட தமிழீழப் பெண்களின் எழுச்சி நாள் : வெளியான அறிக்கை | A Report On Tamil Eelam Women Uprising Day

தமது உரிமைக்கான குரலை இழந்து, பலவீனப்பட்டு நிற்கும் எமது தாயகப் பெண் குலத்தின் விடுதலைக்காக, அவர்களது சுதந்திரம் மிக்க சுபீட்சமான எதிர்காலத்திற்காக உலக அரங்கில் ஓங்கிக் குரலெழுப்ப வேண்டிய கடமை புலம் பெயர்ந்து வாழ் ஈழத்தமிழர்களுடையதாகும்.  

2009 ஆம் ஆண்டு மே மாதத்துடன் எமது மக்கள் சுவாசித்த சுதந்திரக்காற்று முற்றாக அழிக்கப்பட்டு விட்டது அந்த சுதந்திரக்காற்றை எமது மக்கள் மீண்டும் சுவாசிக்க வேண்டும் அதற்காக நாம் எல்லோரும் அயராது உழைக்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புலனாய்வு சேவை முன்னாள் பணிப்பாளருக்கு எதிரான விசாரணை : திகதி அறிவிப்பு

புலனாய்வு சேவை முன்னாள் பணிப்பாளருக்கு எதிரான விசாரணை : திகதி அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!      
ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கோப்பாய் தெற்கு

25 Aug, 2023
மரண அறிவித்தல்

பாண்டியன்தாழ்வு, Wembley, United Kingdom

22 Aug, 2025
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, Villeneuve-le-Roi, France

21 Aug, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், London, United Kingdom

03 Sep, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, London, United Kingdom

24 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, Chenevières, France

21 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, பரந்தன், வவுனியா, Borken, Germany

26 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sankt Ingbert, Germany

03 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Bad Friedrichshall, Germany

24 Aug, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நுணாவில், கொச்சிக்கடை, நீர்கொழும்பு, Melbourne, Australia

19 Aug, 2025
மரண அறிவித்தல்

சரசாலை தெற்கு, Toronto, Canada

15 Aug, 2025
25ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம்

29 Aug, 2000
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், தேவிபுரம்

21 Aug, 2025
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, Wembley, United Kingdom

22 Aug, 2022
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கொழும்பு, Scarborough, Canada

21 Aug, 2025
மரண அறிவித்தல்

சில்லாலை, Vitry-sur-Seine, France

12 Aug, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, அனலைதீவு 6ம் வட்டாரம், Ontario, Canada

20 Aug, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

Atchuvely, Montreal, Canada, கொழும்பு, Hatton

20 Aug, 2010
மரண அறிவித்தல்

ஏழாலை வடக்கு, உடுவில், Bochum, Germany, Scarborough, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு இறுப்பிட்டி, Montreal, Canada, Scarborough, Canada

22 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, கனகராயன்குளம், சென்னை, India, திருச்சி, India

21 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொட்டடி, Colombes, France

01 Sep, 2024
மரண அறிவித்தல்

மட்டுவில், Vaughan, Canada

19 Aug, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், தண்ணீரூற்று, St. Gallen, Switzerland

18 Aug, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, பேர்ண், Switzerland

23 Aug, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி

27 Aug, 2000
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, Zürich, Switzerland

20 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021