தாமரை கோபுரத்திலிருந்து விழுந்து உயிரிழந்த மாணவி : வெளியான புதிய தகவல்

Ministry of Education Colombo Sri Lanka Police Investigation
By Shalini Balachandran Oct 10, 2024 04:49 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in சமூகம்
Report
புதிய இணைப்பு

தாமரை கோபுரத்தில் இருந்து குதித்து உயிரிழந்த பாடசாலை மாணவியின் மரணம் தொடர்பில் காவல்துறையினர் உள்ளிட்ட அதிகாரிகள் முழுமையான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக கொழும்பு தாமரை கோபுர முகாமைத்துவ தனியார் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சம்பவம் தொடர்பில் கொழும்பு தாமரை கோபுர முகாமைத்துவ தனியார் நிறுவனம் அறிக்கையொன்றினை வெளியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளது.

 பார்வையாளர்கள் அனைவரினதும் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதிப்படுத்துவதற்கு உரிய தரப்பினருக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாகவும் நிறுவனம் உறுதியளித்துள்ளது.

புலனாய்வு சேவை முன்னாள் பணிப்பாளருக்கு எதிரான விசாரணை : திகதி அறிவிப்பு

புலனாய்வு சேவை முன்னாள் பணிப்பாளருக்கு எதிரான விசாரணை : திகதி அறிவிப்பு

தாமரை கோபுரம் 

தாமரை கோபுரத்தில் இருந்து குதித்து உயிரிழந்த பாடசாலை மாணவி தான் படித்த சர்வதேச பாடசாலையில் கொடுமைகள் நடப்பதாக கூறியதாக அவரது தந்தை கொழும்பு மாநகர திடீர் மரண விசாரணை அதிகாரியிடம் சாட்சியம் வழங்கியுள்ளார்.

தாமரை கோபுரத்திலிருந்து விழுந்து உயிரிழந்த மாணவி : வெளியான புதிய தகவல் | Lotus Tower Girl Death Moe Emergency Action

கொழும்பில் உள்ள சர்வதேச பாடசாலை ஒன்றில் கல்வி பயின்ற 17 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் கடந்த திங்கட்கிழமை தாமரை கோபுரத்தில் இருந்து குதித்து தவறான முடிவெடுத்து கீழே வீழ்ந்து உயிரிழந்தார்.

 இந்தநிலையில், அவரது மரண விசாரணை நேற்று முன்தினம் (08) கொழும்பு மாநகர மரண விசாரணை அதிகாரி அலுவலகத்தில் இடம்பெற்றதுடன், உயிரிழந்த மாணவியின் தந்தை கொழும்பு மாநகர திடீர் மரண விசாரணை அதிகாரி முன்னிலையில் சாட்சியமளித்திருந்தார்.

யாழில் தொடருந்தில் மோதுண்டு குடும்பஸ்தர் பலி

யாழில் தொடருந்தில் மோதுண்டு குடும்பஸ்தர் பலி

 உயிரிழந்த மாணவி

இதன்போது உயிரிழந்த மாணவியின் தந்தை வழங்கிய சாட்சியத்தில், தனக்கு இரண்டு பெண் பிள்ளைகள் இருப்பதாகவும் உயிரிழந்த மகளின் மூத்த சகோதரி பெலாரஸில் உள்ள மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

லண்டன் பொதுப் பரீட்சைக்குத் தயாராகி கொழும்பில் உள்ள சர்வதேச பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் உயிரிழந்த மகள் கடந்த வாரம் இரண்டு நாட்களாக பாடசாலைக்கு செல்ல மறுத்ததாக தந்தை கூறியுள்ளார்.

தாமரை கோபுரத்திலிருந்து விழுந்து உயிரிழந்த மாணவி : வெளியான புதிய தகவல் | Lotus Tower Girl Death Moe Emergency Action

சம்பவத்தன்று காலை 7.10 மணியளவில் தனது மகளை பாடசாலையில் இறக்கி விட்டு வெளியேறியதாகவும், மாணவியின் கணினி மற்றும் தொலைபேசியை அடிக்கடி சோதிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, அன்றைய தினம் மேலதிக வகுப்புகளுக்கு செல்வதாக கூறிய அவர், அந்த வகுப்பில் பங்கேற்காமல் தோழிகளிடம் பொய் கூறிவிட்டு பாடசாலையை விட்டு வெளியேறியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐ.நா தீர்மானத்தை நிராகரிக்கும் அநுர அரசு - வட மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சாடல்!

ஐ.நா தீர்மானத்தை நிராகரிக்கும் அநுர அரசு - வட மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சாடல்!

பாடசாலை சீருடை

மாணவியின் பையில் 1,500 ரூபா, பாடசாலை சீருடை உள்ளிட்ட பல பொருட்களைக் கண்டெடுத்த காவல்துறையினர், தலையிலும் உடலின் பல பாகங்களிலும் ஏற்பட்ட பலத்த காயங்களால் மரணம் ஏற்பட்டுள்ளதாக உறுதி செய்துள்ளனர்.

எனினும் அவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்தமைக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

தாமரை கோபுரத்திலிருந்து விழுந்து உயிரிழந்த மாணவி : வெளியான புதிய தகவல் | Lotus Tower Girl Death Moe Emergency Action

இதனையடுத்து பொரளையில் உள்ள தனியார் மலர்சாலையில் வைக்கப்பட்ட மாணவியின் சடலத்தின் மீதான இறுதிக்கிரியைகள் நேற்று (09) காலை பொரளை பொது மயானத்தில் இடம்பெற்றுள்ளன.

இதேவேளை, மாணவியின் மரணம் தொடர்பில் ஆராய கல்வி அமைச்சு ஐவர் அடங்கிய குழுவொன்றை நியமித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தபால் மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளல் இன்றுடன் நிறைவு

தபால் மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளல் இன்றுடன் நிறைவு

முதலாம் இணைப்பு

கொழும்பு (Colombo) தாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த மாணவி தொடர்பில் நடவடிக்கை எடுக்க கல்வி அமைச்சு (Ministry of Education) தீர்மானித்துள்ளது.

கடந்த ஏழாம் திகதி கொழும்பு சர்வதேச பாடசாலையை சேர்ந்த மாணவியொருவர் கொழும்பு தாமரைக் கோபுரத்திலிருந்து (Lotus Tower) தவறான முடிவெடுத்து கீழே விழுந்து உயிரிழந்திருந்தார்.

அத்தோடு, உயிரிழந்த குறித்த மாணவியும் கொம்பனித் தெருவில் உள்ள தொடர்மாடிக் குடியிருப்பு தொகுதியிலிருந்து அண்மையில் வீழ்ந்து உயிரிழந்த இரண்டு மாணவர்களும் நண்பர்கள் என காவல்துறையினர் விசாரணைகளில் தெரியவந்திருந்தது.

தாமரை கோபுரத்திலிருந்து விழுந்து உயிரிழந்த மாணவி : வெளியான புதிய தகவல்

தாமரை கோபுரத்திலிருந்து விழுந்து உயிரிழந்த மாணவி : வெளியான புதிய தகவல்

கல்வி அமைச்சு

உயிரிழந்த மூவரும் ஒரே பாடசாலையில் கல்விகற்றவர்கள் என தெரியவந்துள்ள நிலையில் இது தொடர்பாக கொழும்பு சர்வதேச பாடசாலையில் விளக்கம் கோரவுள்ளதாக அமைச்சின் செயலாளர் ஜே.எம்.திலகா ஜயசுந்தர (J.M Thilaka Jayasundara) தெரிவித்துள்ளார்.

தாமரை கோபுரத்திலிருந்து விழுந்து உயிரிழந்த மாணவி : வெளியான புதிய தகவல் | Lotus Tower Girl Death Moe Emergency Action

இது தொடர்பான விசாரணையை மூன்று மேலதிக செயலாளர்கள் மற்றும் இரண்டு பணிப்பாளர்கள் அடங்கிய குழுவினர் மேற்கொள்ளவுள்ளனர்.

தாமரை கோபுரத்திலிருந்து தவறி விழுந்து மாணவி பலி

தாமரை கோபுரத்திலிருந்து தவறி விழுந்து மாணவி பலி

உயிரிழந்த மாணவி 

இலங்கையில் செயற்படும் சர்வதேச மற்றும் தனியார் பாடசாலைகள் மீது கல்வி அமைச்சிற்கு சட்டப்பூர்வ அதிகாரம் இல்லை ஆனாலும் இந்த பிரச்சினை குறித்து அறிக்கை கோரப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தாமரை கோபுரத்திலிருந்து விழுந்து உயிரிழந்த மாணவி : வெளியான புதிய தகவல் | Lotus Tower Girl Death Moe Emergency Action

அத்தோடு, சர்வதேச மற்றும் தனியார் பாடசாலைகளை கல்வி அமைச்சின் ஊடாக கண்காணிக்கும் சட்டத் திருத்தம் மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் ஜே.எம்.திலகா ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

மேலும், கொம்பனித் தெருவில் உள்ள தொடர்மாடிக் குடியிருப்பு தொகுதியிலிருந்து வீழ்ந்து உயிரிழந்த இரண்டு மாணவர்களின் இழப்பிற்கு பின்  தாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த மாணவி கடும் மனவுளைச்சலுக்கு ஆளாகியிருந்ததாக அவரது தந்தை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இணையவழி வங்கி பயனாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை

இணையவழி வங்கி பயனாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, சங்கானை, யாழ்ப்பாணம், நீர்கொழும்பு

26 Jan, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Bremgarten, Switzerland

24 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்புத்துறை, கொழும்பு, London, United Kingdom

22 Jan, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை, பிரான்ஸ், France

24 Jan, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Lünen, Germany

05 Jan, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கல்லடி, Wales, United Kingdom

23 Jan, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, பிரான்ஸ், France, London, United Kingdom

26 Jan, 2017
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

28 Jan, 2024
அந்தியேட்டிக் கிரியையும், 31ம் நாள் நினைவஞ்சலியும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மயிலிட்டி தெற்கு, Frankfurt, Germany

26 Dec, 2025
நன்றி நவிலல்

சரவணை மேற்கு, கொழும்பு 6

24 Dec, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்குழி, பேர்ண், Switzerland

26 Jan, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, பேர்ண், Switzerland

30 Jan, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் கிழக்கு

05 Feb, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி கல்வயல், சுண்டிக்குளி

25 Jan, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், Villejuif, France

09 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Helsingør, Denmark

24 Jan, 2026
மரண அறிவித்தல்

நவக்கிரி, யோகபுரம்

24 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ் தலையாழி, Jaffna, Saint-Ouen-l'Aumône, France

19 Jan, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Drancy, France

25 Jan, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், திருநெல்வேலி, Zürich, Switzerland

04 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

இலுப்பைக்கடவை

25 Jan, 2018
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Lausanne, Switzerland

26 Jan, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், வவுனியா

26 Jan, 2020
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொக்குவில், வட்டக்கச்சி, Gagny, France

21 Jan, 2026
20ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், kilinochchi

06 Feb, 2006
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, Pinner, United Kingdom

17 Jan, 2026
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு, Ottawa, Canada, Markham, Canada

27 Dec, 2025
மரண அறிவித்தல்

தொல்புரம், Drancy, France

18 Jan, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் மேற்கு, கொக்குவில், London, United Kingdom

20 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Uxbridge, United Kingdom

15 Jan, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், முரசுமோட்டை, சுவிஸ், Switzerland

21 Jan, 2021