நள்ளிரவு முதல் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை குறைப்பு
Fuel Price In Sri Lanka
Sri Lanka Fuel Crisis
National Fuel Pass
By Jaso
இன்று (29) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் பெட்ரோல் மற்றும் டீசலின் விலைகளை குறைப்பதற்கு தீர்மானித்துள்ளது.
இதன்படி 434 ரூபாயாக காணப்பட்ட 92 ரக ஒக்டேன் பெட்ரோல் லீற்றரின் விலை 20 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 414 ரூபாவாகும்.
ஏனைய எரிபொருள் விலையில் மாற்றம் இல்லை
அத்துடன் 407 ரூபாயாக காணப்பட்ட ஓட்டோ டீசல் லீற்றரின் விலை 25 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 382 ரூபாயாகும்.

ஏனைய எரிபொருள் வகைகளின் விலைகளில் எந்தவித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
சித்திரவதையின் காயங்கள் உடலில் மாத்திரம் தெரிவதல்ல… 8 மணி நேரம் முன்