ஒரு திருநம்பியின் காதல் கதை
காதல் அனைத்து உயிர்களுக்கும் பொதுவானது என்பார்கள். ஆனால் ஆறு அறிவுள்ள மனிதர்கள் மட்டும் காதலுக்குள் பிரிவினைகளையும் கட்டுப்பாடுகளையும் விதைத்து வைத்திருக்கின்றார்கள்.
முகம் தெரியாது, முகவரி அறியாது வரும் காதல் இப் பூமிப்பந்தில் பல மாற்றங்கள் நிகழ காரணமாய் இருந்திருக்கின்றது.
இந்த திருநம்பியின் காதலும் அப்பிடித்தான் ஒட்டுமொத்த திருநம்பிகளின் வாழ்விலும் புதிய வெளிச்சத்துடன் கூடிய திருப்பத்தை காண்பித்திருக்கின்றது.
காதலுக்கு அழகே காத்திருத்தல் தான் என்பார்கள், ஒன்றல்ல இரண்டல்ல பல முறை காத்திருந்து தனது காதலிலும் வாழ்விலும் வென்றவரே திருநம்பி.கஜகிருஷ்ணன்.
ஒரு திருநம்பியின் பள்ளிக் காதல் வெற்றிபெற இந்த சமூகத்துக்கு எதிரான அவனது போராட்டம் ஒவ்வொரு கட்டத்திலும் ஒரு படிப்பினையை இச் சமூகத்தின் மீது வாரி இறைத்திருக்கின்றது.
கஜகிருஷ்ணனின் காதல் வெற்றி, வரலாற்று ஏடுகளில் அழகிய புது பக்கத்தை திறந்து வைத்திருக்கின்றது என்பதே உண்மை.
இது ஒரு திருநம்பியின் காதல் கதை
