எம்ஜிஆர் ஆகிவிட முடியாது - விஜய்க்கு முன்னாள் அமைச்சர் பதிலடி
தமிழ்நாட்டில் எம்ஜிஆர், ஜெயலலிதா, அண்ணா பெயரை பயன்படுத்தாமல் யாராலும் அரசியல் செய்ய முடியாது. அதனால், வாக்குகளை பெறுவதற்காக அவர்களை பற்றி விஜய் பேசி வருகிறார் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
அதிமுகவுக்கு விழும் ஓட்டுகளை பறிக்க நினைத்து தவெக தலைவர் விஜய், எம்ஜிஆர் குறித்து பேசி வருவதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் தவெக மாநாடு குறித்து கேட்டதற்கு பதிலழித்த போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
வாக்குகளை பெறுவதற்காக விஜய்
மேலும் கருத்து வெளியிட்ட அவர், எல்லோராலும் எம்ஜிஆர் ஆகிவிட முடியாது. இந்த உலகத்தில் ஒரே எம்ஜிஆர், ஒரே பேரறிஞர் அண்ணா தான்.
அவர்களது படத்தை பயன்படுத்தி மாநாடு நடத்தலாம். ஆனால், அதை மக்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.
இங்கு எம்ஜிஆர், அம்மா, அண்ணா பெயரை பயன்படுத்தாமல் யாராலும் அரசியல் செய்ய முடியாது.
அதனால், வாக்குகளை பெறுவதற்காக விஜய் இது போன்று பேசி வருகிறார். இரட்டை இலை சின்னத்திற்கு ஓட்டு போட்ட யாராலும் வேறு ஒரு கட்சிக்கு வாக்களிக்க முடியாது.
விஜய் எங்கள் தலைவர் எம்ஜிஆரை ஏற்றுக் கொண்டதில் மகிழ்ச்சி. ஆனால், அதிமுக ஓட்டு அதிமுகவுக்குத் தான் என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
