ஹிக்கடுவ கடற்கரையில் கரை ஒதுங்கியுள்ள ஈரானிய கப்பலின் சிதைவுகள்
இலங்கையின் காலி கடற்கரையில் அண்மையில் அமெரிக்காவால் தாக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஈரானிய கப்பலின் பல சிதைவுகள் கரையொதுங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த கப்பலுக்கு உரித்தானவை என சந்தேகிக்கப்படும் பொருட்கள் இன்று (07) ஹிக்கடுவ முதல் சீனிகம வரையிலான கடற்கரையில் கரை ஒதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தநிலையில் கடற்கரை முழுவதும் டீசல் கறைகள் காணப்படுவதாகவும், மீன்களும் இறந்துள்ளதாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
தாக்கியழிக்கப்பட்ட கப்பல்
இதன் காரணமாக சுற்றுலாப் பயணிகள் இந்த கடற்கரைக்கு வருவதில்லை என சுட்டிக்காட்டிய அவர்கள் உரிய அதிகாரிகள் இந்த விடயத்தை விரைவில் ஆராய்ந்து ஒரு தீர்வை வழங்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

இலங்கைக்கு அருகில் இந்து சமுத்திரத்தில் “IRINS Dena“ என்ற ஈரானிய போர்க்கப்பலை அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் தாக்கி மூழ்கடித்ததாக தெரிவிக்கப்பட்டது.
குறித்த கப்பலில் இருந்த 87 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில் 32 பேர் உயிருடன் மீட்கப்பட்டு காலியில் உள்ள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |