உக்ரைன் போருக்காக ரஷ்ய படையில் இணைந்த 275 இலங்கையர்கள் பலி

Russo-Ukrainian War Sri Lanka Russia
By Jaso Mar 07, 2026 10:35 AM GMT
Report

உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்ய இராணுவத்தில் இணைந்த தெற்காசிய நாட்டவர்களில்,இலங்கையைச் சேர்ந்தவர்களே அதிக எண்ணிக்கையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஹிமால் சவுத்ஏசியன் (Himal Southasian) அறிக்கையில் இந்த விடயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இந்த மோதல்களில் குறைந்தது 275 இலங்கையர்கள் இறந்துள்ளனர் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போர்க் கைதிகளைக் கையாள்வதற்கும் வெளிநாட்டுப் போராளிகளைக் கண்காணிப்பதற்கும் பொறுப்பான அதிகாரபூர்வ அமைப்பான, உக்ரைனின் போர்க் கைதிகளைக் கையாளும் ஒருங்கிணைப்புத் தலைமையகம், ஹிமால் சவுத்ஏசியனுக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் மற்றும் ஊழல் அறிக்கையிடல் திட்டத்திற்கும் (OCCRP) வழங்கிய தரவிலேயே இதுபற்றிக் கூறப்பட்டுள்ளது.

அமைச்சர் விஜித ஹேரத்தின் அறிவிப்பு 

கடந்த ஆண்டின் தொடக்கத்தில் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோது ரஷ்ய போர்க்களத்தில் 59 இலங்கையர்கள் உயிரிழந்துள்ளதாகத் தெரிவித்திருந்தார்.

உக்ரைன் போருக்காக ரஷ்ய படையில் இணைந்த 275 இலங்கையர்கள் பலி | 275 Sri Lankans Killed In Russia Ukraine War

எனினும் இலங்கை அரசாங்கத்தால் ஒப்புக்கொள்ளப்பட்ட 59 உயிரிழப்புகளை விட உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாகும் என தெரிவிக்கப்படுகிறது.

ரஷ்ய இராணுவத்திற்குள் உள்ள ஆதாரங்களில் இருந்து, ஓரளவு பெறப்பட்ட தரவுத்தொகுப்பு, 2022 இல் உக்ரைன் மீதான ரஷ்யாவின் முழு அளவிலான படையெடுப்பின் தொடக்கத்திலிருந்து 2025 செப்ரெம்பர் வரையிலான காலகட்டத்தை உள்ளடக்கியதாகும்.

கொல்லப்பட்டவர்களில் முதலிடத்தில் இலங்கையர்

ரஷ்யப் படைகளில் இணைந்த இலங்கை, நேபாளம், இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த மொத்தம் 455 தெற்காசியர்கள் போர்க்களத்தில் கொல்லப்பட்டுள்ளனர்.

உக்ரைன் போருக்காக ரஷ்ய படையில் இணைந்த 275 இலங்கையர்கள் பலி | 275 Sri Lankans Killed In Russia Ukraine War

இந்த நாடுகளில் இருந்து ரஷ்ய இராணுவத்தில் சேர்க்கப்பட்டதாக அறியப்பட்ட தெற்காசியர்களின் பெயர்களையும் தரவு குறிப்பிடுகிறது, இதில் 1923 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

 இதில் இலங்கை முதலிடத்தில் உள்ளது, குறைந்தது 751 பேர் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டதில், குறைந்தது 275 இலங்கையர்கள் போரில் கொல்லப்பட்டுள்ளனர்.

ரஷ்ய இராணுவத்தில் சேர்க்கப்பட்ட இலங்கையர்களின் உண்மையான எண்ணிக்கையும், போரில் கொல்லப்பட்ட அல்லது காணாமல் போனவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகமாக இருக்கலாம்” என்று ஒருங்கிணைப்பு தலைமையகம் ஹிமாலிடம் தெரிவித்துள்ளது.

அதிகளவாக நேபாளத்தில் இருந்து 852 பேர் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 115 பேர் இறந்துள்ளனர், இது இலங்கைக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் உள்ளது.

அமெரிக்க இலக்குகளை துல்லியமாக தாக்கும் ஈரான்! பின்னணியில் ரஷ்யா

அமெரிக்க இலக்குகளை துல்லியமாக தாக்கும் ஈரான்! பின்னணியில் ரஷ்யா

மொழித் தடைகள் அதிகளவு உயிரிழப்பிற்கு காரணம்

பங்களாதேசில், 104 பேர் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டதில் 34 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் இருந்து 170 பேர் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டதில் 23 பேர் கொல்லப்பட்டனர்.

உக்ரைன் போருக்காக ரஷ்ய படையில் இணைந்த 275 இலங்கையர்கள் பலி | 275 Sri Lankans Killed In Russia Ukraine War

ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட 18 பேரில் ஐந்து ஆப்கானியர்கள் கொல்லப்பட்டுள்ளனர், மேலும் 22 பாகிஸ்தானியர்களில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

மொழித் தடைகள் மற்றும் நவீன சண்டை உபகரணங்கள் இல்லாதது ஆகியவை தெற்காசியர்கள் நடவடிக்கையில் கொல்லப்படுவதற்கு காரணமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட அலி கமேனியின் மரணம் : இஸ்ரேல் வெளியிட்ட தகவல்

முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட அலி கமேனியின் மரணம் : இஸ்ரேல் வெளியிட்ட தகவல்

 உக்ரைன் இராணுவத்தில் இணைந்த இலங்கையர்களும் பலி

ஒருங்கிணைப்பு தலைமையகத்தின் தரவுகளின்படி, ரஷ்யா 44 நாடுகளில் இருந்து 24,000 க்கும் மேற்பட்ட போராளிகளை வேலைக்கு அமர்த்தியுள்ளது.

உக்ரைன் போருக்காக ரஷ்ய படையில் இணைந்த 275 இலங்கையர்கள் பலி | 275 Sri Lankans Killed In Russia Ukraine War

 இதற்கிடையில், உக்ரைன் இராணுவத்தில் இணைந்திருந்த நான்கு இலங்கையர்கள் போரில் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும், இன்னும் ஐந்து இலங்கையர்கள் உக்ரைன் இராணுவத்தில் பணியாற்றி வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

அதேவேளை, ரஷ்ய இராணுவத்தில் இணைந்து போராடியபோது கைது செய்யப்பட்ட எட்டு இலங்கையர்கள் தற்போது உக்ரைன் அதிகாரிகளின் காவலில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் பத்து ஈரானிய உளவாளிகள் கைது!

பிரித்தானியாவில் பத்து ஈரானிய உளவாளிகள் கைது!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

02 Sep, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மீசாலை, Le Mée-sur-Seine, France

08 Sep, 2026
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டுவன், வட்டக்கச்சி இராமநாதபுரம்

10 Sep, 2018
மரண அறிவித்தல்

தாவடி, ஊரெழு, சிட்னி, Australia

07 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway

10 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026