அதிபர் ரணிலின் ஊடகப் பிரச்சார நிகழ்ச்சித்திட்டத்தை ஆரம்பிப்பதற்கான விசேட கலந்துரையாடல்
அடுத்த வருடம் (2024) நடைபெறவுள்ள தேசியத் தேர்தலில் வெற்றிபெறும் நோக்கில் அதிபர் ரணில் விக்ரமசிங்க தனது ஊடகப் பிரச்சார நிகழ்ச்சித்திட்டத்தை ஆரம்பிப்பதற்கான ஆரம்பக் கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளார்.
இதன்படி, அதிபரின் சிரேஷ்ட ஆலோசகர் பேராசிரியர் சுனந்த மத்தும பண்டார, அரசாங்கத் தகவல் பணிப்பாளர் நாயகம் தினித் சிந்தக மற்றும் அதிபர் ஊடகப் பணிப்பாளர் நாயகம் தனுஷ்க ராமநாயக்க ஆகியோரின் தலைமையில் இந்த ஆரம்பக் கலந்துரையாடல்கள் இரண்டு நாட்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டன.
ஊடகப் பிரச்சாரம்
இக்கலந்துரையாடலில், செய்தித்தாள்கள், வானொலி மற்றும் தொலைக்காட்சி போன்ற ஊடகத் துறைகள் எவ்வாறு ஊடகப் பிரச்சாரத்தில் திறம்பட பயன்படுத்தப்படுகின்றன என்பது குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இந்த நடவடிக்கைகளில் சமூக வலைத்தள பிரச்சாரங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தவுள்ளதாக மேற்படி அதிகாரிகள் தெரிவித்துள்ளமை விசேட அம்சமாகும்.
இக்கலந்துரையாடலில் அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் ஊடகப் பிரச்சார நடவடிக்கைகளில் காணப்படும் குறைபாடுகள் தொடர்பிலும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டதுடன், அந்தக் குறைபாடுகளை தவிர்த்து அதிபருக்க ஊடகப் பொறிமுறையை பலப்படுத்துவது தொடர்பில் கருத்துக்கள் பரிமாரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |