போரில் வெற்றி! ரஷ்யாவின் முக்கிய புள்ளி வெளியிட்ட தகவல்
உக்ரைன்–ரஷ்யா இடையேயான போர் மூன்று ஆண்டுகளைத் தாண்டி, தற்போது நான்காம் ஆண்டை நோக்கி நகர்ந்து வருகிறது.
இந்த சூழலில், “இந்த போரில் ரஷ்யா எப்போது வெற்றி பெறும்?” என்று ஒரு செய்தியாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த ரஷ்ய பாதுகாப்பு கவுன்சிலின் துணைத் தலைவர் டிமிட்ரி மெத்வதேவ், உக்ரைன் போரில் ராணுவ ரீதியான வெற்றி விரைவில் கிடைக்கும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.
அதே நேரத்தில், வெற்றியை விட முக்கியமான விடயம் எதிர்காலத்தில் புதிய மோதல்கள் உருவாகாமல் தடுப்பதே என்று அவர் வலியுறுத்தினார். போர் முடிவடைந்த பிறகு நிலைமை எப்படி இருக்கும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
முக்கியமான இலக்கு
இதனால், ரஷ்யா போரில் வெற்றி பெறும் பட்சத்தில், மோதல் முடிவுக்கு வரக்கூடும். ஆனால், வெற்றியை நிர்ணயிக்கும் அடிப்படை காரணிகள் குறித்து அவர் தெளிவான தகவல்களை பகிரவில்லை.

Image Credit: Radio Free Europe
2008 முதல் 2012 வரை ரஷ்யாவின் ஜனாதிபதியாக பதவி வகித்த மெத்வதேவ், ரஷ்யாவின் வெற்றி விரைவில் நிகழ வேண்டும் என்று தனிப்பட்ட விருப்பத்தையும் தெரிவித்தார்.
இதேவேளை, அந்த வெற்றி எதிர்காலத்தில் அமைதியை உறுதி செய்யும் வகையில் இருக்க வேண்டும் என்பதே மிக முக்கியமான இலக்கு என்று அவர் கூறினார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இரண்டுமுறை பாரிய படுகொலைகளைச் சந்தித்த கொக்கட்டிச்சோலை…
3 நாட்கள் முன்