உக்ரைனை கதி கலங்க செய்யும் ரஷ்ய ட்ரோன் தாக்குதல்கள்! 12 பேர் பலி
உக்ரைனின் தென்கிழக்கு பகுதியில் உள்ள ட்னிப்ரோபெட்ரோவ்ஸ்க் மாகாணத்தில் ரஷ்யா மேற்கொண்ட ட்ரோன் தாக்குதலில் சுமார் 12 சுரங்கத் தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாகவும் 8 பேர் காயமடைந்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வேலை முடிந்த பின்னர் சுரங்கத் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்தை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக உக்ரைனின் மிகப்பெரிய தனியார் மின்சார நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதல் பாவ்லோஹ்ராட் மாவட்டத்தில் இடம்பெற்றதாக அப்பகுதி ஆளுநர் ஒலெக்சாண்டர் கண்ஷா உறுதிப்படுத்தியுள்ளார்.
மனிதநேயமற்ற தாக்குதல்
ட்ரோன் தாக்குதலால் பேருந்தில் தீப்பற்றியதாகவும், பின்னர் அவசர சேவைகளால் தீ அணைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Image Credit: The Guardian
இந்நிலையில், இதனை உக்ரைன் எரிசக்தி அமைச்சர் டெனிஸ் ஷ்மிஹால், இது எரிசக்தித் துறை ஊழியர்களை திட்டமிட்டு குறிவைத்த “மனிதநேயமற்ற தாக்குதல்” என கடுமையாக கண்டித்துள்ளார்.
முன்னதாக தென்கிழக்கு உக்ரைனின் சபொரிஜ்ஜியா நகரில் உள்ள மகப்பேறு மருத்துவமனை மீது நடந்த தாக்குதலிலும் பலர் காயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இரண்டுமுறை பாரிய படுகொலைகளைச் சந்தித்த கொக்கட்டிச்சோலை…
3 நாட்கள் முன்