வெளிநாடொன்றில் காதலியை கொலை செய்த இலங்கை இளைஞர்
Sri Lanka
Crime
Death
By Sumithiran
வெளிநாடொன்றில் தனது காதலியை இலங்கை இளைஞர் கொலை செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரோமிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது இலங்கையை பூர்வீகமாக கொண்ட இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காதலி கொலை
17 வயதுடைய இவ் இளைஞர் 17வயது யுவதியான தனது காதலியை கொலை செய்த குற்றச்சாட்டிலேயே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
படுகொலை செய்யப்பட்ட யுவதியின் உடலில் பத்து கத்திக்குத்து காயங்கள் காணப்படுவதாகவும் குப்பைகளுக்கு மத்தியில் காதலியின் உடல் மீட்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
வாக்குவாதமே கொலைக்கு காரணம்
மேலும் அவர்களுக்கு இடையே இடம் பெற்ற வாக்குவாதமே கொலையில் முடிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
