ஈரான் அரச வானொலி நிலையத்தின் மீது தாக்குதல்
ஈரானின் அரச வானொலி நிலையத்தின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஈரானின் தெற்கு கடற்கரையில், ஹோர்முஸ் நீரிணைக்கு அருகில் அமைந்துள்ள துறைமுக நகரமான பந்தர் அப்பாஸில் உள்ள ஒரு வானொலி நிலையம் மீதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஈரானின் புரட்சிகர காவல் படையுடன் (IRGC) தொடர்புடைய, அரை அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான தஸ்னிமை மேற்கோள் காட்டி இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
வானொலி நிலையம் மீது தாக்குதல்
குறித்த வானொலி நிலையத்தின் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இதேவேளை, கடந்த 24 மணித்தியாலங்களில் ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நடத்திய தாக்குதல்களில் சிறுவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அமெரிக்காவை தளமாகக் கொண்ட மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
ஈரான் மீதான தாக்குதல்கள் ஆரம்பிக்கப்பட்டது முதல் இதுவரையான காலப்பகுதியில் 1,400க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதோடு, அவர்களில் 214 சிறுவர்களும் அடங்குவர் என அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |