நிமோனியா காய்ச்சலால் உயிரிழந்தவரின் நுரையீரலில் இருந்த பொருள்
பலாங்கொடை வைத்தியசாலையில் நிமோனியா காய்ச்சலில் பாதிக்கப்பட்டு உயிரிழந்த ஒருவரின் நுரையீரலில் இருந்து பல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பலாங்கொடை - வலேபொட பிரதேசத்தைச் சேர்ந்த 59 வயதுடைய சுதுஹக்குறு கருணாரத்ன என்பவர் நிமோனியா காய்ச்சலில் பாதிக்கப்பட்டு அண்மையில் உயிரிழந்தார்.
உயிரிழந்தவரின் பிரேத பரிசோதனை நீதிமன்றத்துக்கான வைத்திய அதிகாரி சேத்தி சத்யா முன்னிலையில் திடீர் மரண பரிசோதகர் பத்மேந்திர விஜயதிலகவினால் முன்னெடுக்கப்பட்டது.
நுரையீரலில் இருந்து
இதன்போது உயிரிழந்தவரின் நுரையீரலில் இருந்து பல் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து குறித்த விடயம் தொடர்பில் அவரது குடும்பத்தாரிடம் வினவியபோது, சில வருடங்களுக்கு முன்பு குறித்த நபரின் பல் விழுந்து காணாமல் போயிருந்தாக குறிப்பிட்டனர்.
இந்த நிலையில், அவரது பல் நுரையீரலில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
