53 முறைப்பாடுகள் - கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெண்ணொருவர் கைது
Sri Lanka Police
Bandaranaike International Airport
Colombo
Sri Lanka Airport
By Pakirathan
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பெண் ஒருவரை குடிவரவு திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
வெளிநாட்டுக்கு அனுப்புவதாக மேற்கொள்ளப்பட்ட நிதி மோசடி தொடர்பில் குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த பெண் தொடர்பில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு 53 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளது.
பண மோசடி
இதற்கமைய அவர் இந்தியாவில் இருந்து இலங்கை திரும்பிய நேரத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் பத்தரமுல்ல பிரதேசத்தை சேர்ந்த 44 வயதுடைய பெண் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறித்த பெண் 1.3 மில்லியன் ரூபாய் பண மோசடி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
