துப்பாக்கியுடன் சிக்கிய இளைஞன்! அம்பலமான பின்னணி
Colombo
Sri Lankan Peoples
Sri Lanka Police Investigation
By Dhilak
மாஹாரகம தொடருந்துப் பாதைப் பகுதியில் துப்பாக்கியுடன் 22 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர், போதைப்பொருள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி ஒருவரின் மகன் என மேற்கு மாகாண தெற்கு குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது.
மேலதிக விசாரணை
மேற்கு மாகாண தெற்கு குற்றப்பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், சந்தேக நபரின் வீட்டில் சோதனை நடத்திய போது மேற்படி துப்பாக்கி கைப்பற்றப்பட்டுள்ளது.
இதன்படி, கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நீதிமன்றத்தில் முற்படுத்தபட உள்ள நிலையில், மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்