நாமல் ராஜபக்சவிற்கு பிடித்த இந்திய கிரிக்கெட் வீரர் யார்..!
சிறிலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச நேற்று (14) இந்திய ஊடகமொன்றுடனான ஒரு கேள்வி பதில் அமர்வில் பங்கேற்றார்.
இந்த அமர்வின் போது, உள்ளூர் மற்றும் உலகளாவிய அரசியல் தொடர்பான பல விஷயங்களை இந்திய பத்திரிகையாளர்கள் நாமல் ராஜபக்சவுடன் விவாதித்தனர், குறிப்பாக இலங்கை கடல் அருகே ஐரிஸ் டேனா கப்பல் மீது சமீபத்தில் அமெரிக்கா நடத்திய டார்பிடோ தாக்குதல் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.
ஒழுக்கக்கேடான தாக்குதல்
இந்தத் தாக்குதல் ஒழுக்கக்கேடானது என்று நாமல் ராஜபக்ச கூறினார்.

மத்திய கிழக்கின் நிலைமை மற்றும் இலங்கை பொருளாதாரத்திற்கு ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
இந்தியாவில் பிடித்த கிரிக்கெட் வீரர்
இறுதியாக, இந்தியாவில் அவருக்குப் பிடித்த கிரிக்கெட் வீரர் பற்றி பத்திரிகையாளர்கள் நாமல் ராஜபக்சவிடம் கேட்டபோது, பல இந்திய கிரிக்கெட் வீரர்களை தான் விரும்புவதாக நாமல் கூறினார். அவர்களில் அபிஷேக் சர்மாவும் ஒருவர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

நடந்து முடிந்த ரி20 உலகக் கோப்பையில் சிறப்பாகச் செயல்பட்ட சஞ்சு சாம்சன் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரை தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும் நாமல் ராஜபக்ச கூறினார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |