சிறிலங்காவில் அதிபர் முறைமையை இல்லாதொழிக்க முயற்சி
சிறிலங்காவில் அதிபர் மற்றும் பொதுத் தேர்தல்களை ஒத்திக்கும் அரசாங்கத்தின் முயற்சிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அனைத்து எதிர்க்கட்சிகளும் தீர்மானித்துள்ளன.
அத்துடன், நிறைவேற்று அதிபர் முறைமையை நீக்கிவிட்டு புதிய தேர்தல் முறை கொண்டுவரவும் எதிர்க்கட்சிகள் முயற்சிக்கின்றன.
ஒன்றிணைந்து செயற்பட தீர்மானம்
இந்த விடயத்தில் ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி, உத்தர லங்கா கூட்டணி, சுதந்திர மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் மற்றும் குழுக்கள் ஒன்றிணைந்து செயற்பட தீர்மானித்துள்ளன.
அதிபர் தேர்தலை அடுத்த ஆண்டு ஒக்டோபர் மாதத்துக்கு முன்னரும், பொதுத் தேர்தலை 2025 ஓகஸ்ட் மாதத்துக்கு முன்னரும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
திட்டமிட்டபடி தேர்தல் நடத்தப்படாவிட்டால், வாக்களிக்கும் உரிமையை பாதுகாக்கும் வகையில் சட்டத்தின் ஊடாக செயற்பட குறித்த கட்சிsjb களும் குழுக்களும் தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது.
தேர்தல் பிற்போட்டால்
இறுதி முயற்சியாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட அதிபர் முறைமையை இல்லாதொழிக்கவும் அதிபர் தேர்தலை ஒத்திவைக்கவும் முயற்சிப்பதாக எதிர்கட்சிகள் தெரிவித்துள்ளன.
அரசாங்கம் தன்னிச்சையாக தேர்தலை பிற்போட்டால் அதற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு அனைத்து எதிர்க்கட்சிகளும் தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.