13 எதிர்க்கும் பிக்குகள் கோட்டாவின் ஆதரவாளர்கள் - லக்ஸ்மன் பகிரங்கம்
13th amendment
Gotabaya Rajapaksa
Lakshman Kiriella
By Dharu
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை ஐக்கிய மக்கள் சக்தி ஆதரிக்கும் என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்
13 ஆவது திருத்தச் சட்டம் என்பது அரசமைப்பின் ஓர் அங்கமாகும். அதனை எதற்காக எதிர்க்க வேண்டும் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
பௌத்த பிக்குகள் போர்க்கொடி

மேலும், கோட்டாபய ராஜபக்சவுக்குச் சார்பான ஓரிரு பிக்குகளே 13 இற்கு எதிராகப் போராட்டம் நடத்துகின்றனர் என தெரிவித்துள்ளார்.
13 ஆவது திருத்தச் சட்டத்துக்கு எதிராகப் பௌத்த பிக்குகள் போர்க்கொடி தூக்கியுள்ளமை அரசியலமைப்பிற்கு எதிரான விடயம் என அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்
5ம் ஆண்டு நினைவஞ்சலி