வெளிநாடொன்றில் இலங்கையர்களுக்கான வேலைவாய்ப்பு : அரசின் அறிவிப்பு
E-8 விசா பிரிவின் கீழ் நியாமான முறையில் தொழிலாளர்களை கொரியாவுக்கு (Korea) அனுப்புவதில் இலங்கை அரசாங்கம் உறுதியாகவுள்ளதாக வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர (Arun Hemachandra) தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை நேற்று (04) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “இந்தத் துறை ஏராளமான பிரச்சினைகளை எதிர்கொள்கின்றது.
மோசடி நடவடிக்கை
அத்தோடு, பலர் தங்கள் புகார்கள், பரிந்துரைகள் மற்றும் யோசனைகளை முன்வைக்க ஒரு தளத்தைக் கோரியுள்ளன.
பொதுமக்கள் தங்களது பிரச்சினைகளை முன்வைக்க நேரடி தளமொன்று உருவாக்கப்படும்.
இடைத்தரகர்கள் சம்பந்தப்பட்ட மோசடி நடவடிக்கைகள் மற்றும் வேலைவாய்ப்பு உரிமங்கள் தொடர்பான பிரச்சினைகள் உட்பட இந்தத் துறையில் பல்வேறு முறைகேடுகளையும் இடம்பெறுகின்றது.
விசாரணைகள்
இந்த விவகாரங்கள் குறித்து தற்போது விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
குற்றவாளிகள் எனக் கண்டறியப்பட்டவர்களுக்கு எதிராக பொறுப்பான நிறுவனங்கள் சட்ட நடவடிக்கை எடுத்து வருகின்றன.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரச்சினைகளைத் தொடர்ந்து நிவர்த்தி செய்வதற்கும் சரியான நேரத்தில் தீர்வுகளை வழங்குவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
