கொழும்பு கண்டி பிரதான வீதியில் கோர விபத்து..!
Colombo
Sri Lanka Police Investigation
Accident
By Dharu
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றும் பாரவூர்தி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் பாரிய விபத்தொன்று ஏற்பட்டுள்ளது.
குறித்த விபத்தானது இன்று (09) அதிகாலை கொழும்பு - அவிசாவளை வீதியில் ஹங்வெல்ல, அம்குகம பிரதேசத்தில்(கொழும்பு கண்டி பிரதான வீதி) இடம்பெற்றுள்ளது.
கொழும்பில் இருந்து அவிசாவளை நோக்கி பயணித்த பாரவூர்தியானது, அக்கரப்பற்றில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பேருந்து ஓட்டுநர் மற்றும் 20 பயணிகள்
குறித்த விபத்தில் பேருந்து ஓட்டுநர் மற்றும் 20 பயணிகள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்களில் பாரவூர்தியின் சாரதியும் அடங்குவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். .




31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்