கவனயீனத்தால் ஏற்பட்ட விபரீதம் - சம்பவத்தில் பலியான சாரதி (படங்கள்)
மாத்தறை வெலிகம பிரதேசத்தில் முச்சக்கர வண்டியொன்று தொடருந்துடன் மோதியதில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று (22) காலை 6.45 மணியளவில் மாத்தறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த காலி குமரி தொடருந்து மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த விபத்தில், முச்சக்கரவண்டியின் சாரதியான தெலிஜ்ஜவில பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதான தம்மிக்க தேசப்பிரிய உயிரிழந்துள்ளதுடன், 22 வயதான கிரிஷான் மதுசங்க காயமடைந்துள்ளார்.
கவனக்குறைவு
புகையிரத சமிக்ஞை ஒளிரும் போது முச்சக்கர வண்டி கவனக்குறைவாக புகையிரத பாதையை கடந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தை நேரில் பார்த்த பெண் கூறுகையில்,"பாதுகாப்பு மணி அனைத்தும் கூட சாரதி பாதையை கடக்க முயற்சித்தார்.
தொடருந்து அருகில் வந்ததும் பின்னல் இருந்தவர் முச்சக்கரவண்டியில் இருந்து குதித்துவிட்டார். அப்போதே குறித்த விபத்து ஏற்பட்டது.''என தெரிவித்தார்.






