ரணிலுக்கு ஆதரவளிக்க சென்று சர்ச்சையில் சிக்கிய சுமந்திரன்!
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டமை குறித்து சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் (M. A. Sumanthiran) தெரிவித்த கருத்து அரசியல் வட்டாரத்தில் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.
அதாவது, “பாரிய குற்றங்களுக்காக அரச தலைவர்கள் தண்டிக்கப்பட வேண்டும், எவரும் சட்டத்திற்கு மேலானவர்கள் இல்லை.
ஆனால் நீதிமன்றில் முன்வைத்த குற்றத்துக்காக ரணில் விக்ரமசிங்கவை ஒரு வெள்ளிக்கிழமை கைது செய்து பிணை வழங்குவதை எதிர்த்ததென்பது, முறையான ஆலோசனை அற்றதாகவே தோன்றுகிறது” என சுமந்திரன் தெரிவித்திருந்தார்.
இந்த கருத்து அரசியல் தலைமைகளிடையே பாரிய விமர்சனங்களுக்கு உள்ளாகி இருந்த நிலையில், இது தொடர்பில் அமைச்சர் பிமல் ரத்நாயக்கவும் (Bimal Rathnayake) சுமந்திரனை நோக்கிய கேள்விகளை நேற்று (24) ஊடகங்களில் முன்னிருத்தி இருந்தார்.
இது தொடர்பில் மீண்டும் நேற்றைய தினம் (24) சுமந்திரன் தனது உத்தியோகப்பூர்வ முகப்புத்தகத்தில் வெளியிட்டிருந்த பதிவில், 'சட்டம் சகலருக்கும் சமனானது.
வெள்ளிக்கிழமை கைது செய்து பிணை கொடுக்க முடியாது என்ற காரணத்துக்காக கடினமான சட்டத்தை உபயோகிப்தை எதிர்க்கும் எனது நிலைப்பாட்டில் மூன்றிலொரு நூற்றாண்டு காலமாக ஓரே கொள்கையையே கொண்டிருக்கிறேன்.
இது எவருக்கு எதிராக (முன்னைய காலத்தில் இப்படியாக சட்டத்தை தவறாக பாவித்தவராக இருந்தால் கூட) செய்யப்பட்டாலும் எனது நிலைப்பாடு அதுவேதான் சட்டம் சகலருக்கும் சமனாகப் பிரயோகிக்கப்பட வேண்டும்” என விளக்கமளித்திருந்தார்.
இது தற்போது அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளுக்குள்ளாகி இருக்கும் நிலையில், இவ்வாறு தமிழர் மற்றும் தென்னிலங்கை பகுதிகளில் பேசுபொருளுக்குள்ளாகி இருக்கும் மேலும் சில முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகின்றது ஐபிசி தமிழின் இன்றைய பத்திரிக்கை கண்ணோட்டம்,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

